Sukran Peyarchi 2022 Palangal: ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால், அவர் நினைத்த காரியம் வெற்றி பெறும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். அப்படியாக, சுக்கிரனின் இந்த சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ஜோதிடத்தின் படி, செல்வம், அதிர்ஷ்டம், அழகு, வளமை ஆகியவற்றின் காரணியான, சுக்கிரன் கிரகம் வருகிற ஜூலை 13 ஆம் தேதி, மிதுன ராசியில் காலை 10.50 மணிக்கு பெயர்ச்சி நடக்கிறது. இது எல்லா ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட சில அதன் சிறப்பான பலனைப் ஆகஸ்ட் 7 வரை பெறுவார்கள். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
25
Sukran Peyarchi 2022 Palangal:
மிதுனம்:
சுக்கிரனின் ராசி மாற்றத்தால் வாழ்வில் வெற்றிகள் உண்டாகும். வியாபாரிகள் கூட்டுப் பணிகளில் வெற்றி பெறலாம். இந்த நேரத்தில், உங்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். இந்தநேரத்தில் உங்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
ரிஷப ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார்.உங்கள் ராசிக்கு சுக்கிரனின் அருளால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலை மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியில் வெற்றிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபமும் கூடும். அதிர்ஷ்டத்தின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் திட்டம் செயல்படும்.
45
Sukran Peyarchi 2022 Palangal:
சிம்மம்:
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது வருமானம் மற்றும் லாபம் தரும் இடமாக கருதப்படுகிறது. இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய வேலை வாய்ப்புபெறலாம். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் பண ஆதாயம் உண்டாகும்.
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, சுக்கிரன் சஞ்சாரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், நீங்கள் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பணியில் மேலதிகாரி மகிழ்ச்சி அடைவார். பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.இந்த காலகட்டத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் எந்த முக்கியமான வணிக ஒப்பந்தத்திலும் முதலீடு செய்யலாம்.