Sevvai Peyarchi 2022: செவ்வாய் மாற்றத்தால்...இந்த மூன்று ராசிகளுக்கு அடுத்த இரண்டு வாரம் பண மழை பொழியும்..

First Published | Jul 26, 2022, 8:02 AM IST

Sevvai Peyarchi 2022 Palangal: ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பாக இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் அதிஷ்டம் இருக்கும். அதன்படி, அடுத்த இரண்டு வாரம் செவ்வாயின் நேரடி அருள் மழையில் நனையும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Sevvai Peyarchi 2022

ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றத்தை நேரம் கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகமும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும்.  செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம், நிலம், திருமணம் ஆகியவற்றின் காரணியாக விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.அதன்படி, கடந்த ஜூன் 27 ஆம் தேதி மேஷ ராசியில் செவ்வாய் கிரகம் சஞ்சரித்துள்ளது. இவர், ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இந்த மேஷ ராசியில் இருப்பார். இந்த நேரத்தில், 3 ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மிகவும் சாதகமாக இருப்பார். அதன்படிஇன்னும் இரண்டு வாரங்கள் சிறப்பாக இருக்கும் அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: ஆகஸ்டில் சுக்கிரன் இடம் மாற்றம்...இந்த ராசிகளுக்கு சோதனை இருக்கும், உஷாரா இருங்க...

Sevvai Peyarchi 2022:

சிம்மம்:
 
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நன்மைகளை தருவார். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.திடீர்  பண வரவு அதிகம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் உதவியால் புதிய வாய்ப்புகள் வரும். அரசுத் துறையினர் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ளலாம். உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.  போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
 

Tap to resize

Sevvai Peyarchi 2022:

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு மேஷ ராசியில் உள்ள செவ்வாய் கிரகம் மிகுந்த பலனைத் தருவார். தொழில் முன்னேற்றம் அடைவார்கள். புதிய வேலை வாய்ப்பு வரலாம். பதவி உயர்வு-கௌரவம் உயரும். வியாபாரிகளின் முன்னேற்றம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வேலைகளை செய்பவர்களுக்கு நல்ல நேரம். பணி மாறுதல், விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறுவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: ஆகஸ்டில் சுக்கிரன் இடம் மாற்றம்...இந்த ராசிகளுக்கு சோதனை இருக்கும், உஷாரா இருங்க...

Sevvai Peyarchi 2022:

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சிறப்பான பலனை தருவார்.  தொழிலில் லாபம் கிடைக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றம்  இருக்கும். செவ்வாய்ப் பெயர்ச்சியின் போது, நிதி நிலை சிறப்பாக இருக்கும். அதிகரித்த செலவுகள் உங்களைத் தொல்லைகளை தராது, ஆனால் சரியான பட்ஜெட்டை உருவாக்கி செலவு செய்யுங்கள். வேலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும். 

மேலும் படிக்க....Sukran Peyarchi 2022: ஆகஸ்டில் சுக்கிரன் இடம் மாற்றம்...இந்த ராசிகளுக்கு சோதனை இருக்கும், உஷாரா இருங்க...

Latest Videos

click me!