Tea Coffee: தேநீர், காபி குடிக்கும் போது செய்யும் இந்த தவறு ஆபத்தை அதிகரிக்கலாம்! அதிர்ச்சி தகவல்

Published : Sep 12, 2026, 09:35 AM IST

Tea Coffee: காலையில் ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபி இல்லாமல் நாளை தொடங்க முடியாதவர்கள் ஏராளம். ஆனால், பானத்தின் சுவையை விட அதன் வெப்பநிலையும் முக்கியம் என்பது பலருக்கும் தெரியாது.

PREV
15
தேநீர் குடிக்கும் பழக்கம்

தேநீர், காபி போன்ற பானங்கள் பலரின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர், அலுவலக இடைவேளையில் காப்பி என தொடர்ந்து குடிப்பவர்களும் இருக்கிறார்கள். இதில் பானத்தின் வகையை மட்டும் கவனிப்பது போதாது. அதை எந்த வெப்பநிலையில் குடிக்கிறோம் என்பதும் முக்கியம். சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பான IARC, 65°C-க்கும் அதிகமான வெப்பநிலையில் மிகவும் சூடான பானங்களை மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் உள்ள குழு 2A பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

25
காபி குடிக்கும் பழக்கம்

மிகவும் சூடான திரவம் மீண்டும் மீண்டும் உணவுக்குழாய் வழியாக செல்லும்போது, ​​அப்பகுதியில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு முக்கியமானதாக இருக்கலாம். உணவை வாயிலிருந்து வயிற்றுக்கு கொண்டு செல்லும் குழாய்தான் உணவுக்குழாய். அதிக வெப்பநிலையுள்ள பானங்களை தொடர்ந்து குடிப்பது அந்த பகுதியில் மீண்டும் மீண்டும் வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். IARC ஆய்வுகள், மிகவும் சூடான பானங்களுக்கும் உணவுக்குழாய் புற்றுநோய்க்கும் இடையே தொடர்ந்து இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.

35
தேநீர் ஆரோக்கிய பாதிப்பு

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் தேநீர் அல்லது காப்பி என்ற பானத்தின் பெயர் அல்ல, அதன் வெப்பநிலை என்பதுதான். IARC மதிப்பீட்டில் 65°C-க்கு மேல் உள்ள பானங்களே “மிகவும் சூடானவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மிகவும் சூடான பானங்களை எவ்வளவு அளவு அல்லது எத்தனை ஆண்டுகள் குடித்தால் புற்றுநோய் ஏற்படும் என்று குறிப்பிட்ட அளவை அறிவியல் ஆய்வுகள் நிர்ணயிக்கவில்லை. எனவே, “தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சூடான தேநீர் குடித்தால் நிச்சயம் புற்றுநோய் வரும்” என்று கூறுவது சரியானது அல்ல.

45
சூடான தேநீர்

இதற்காக தேநீர் அல்லது காப்பியை நீக்க வேண்டிய அவசியமில்லை. நடைமுறையில் செய்யக்கூடிய எளிய மாற்றம், சுடச்சுட குடிப்பதைத் தவிர்ப்பது. கப் அல்லது டம்ளரில் ஊற்றிய உடனேயே அருந்தாமல், சிறிது நேரம் காத்திருந்து வெப்பநிலை குறைந்த பிறகு குடிக்கலாம். IARC ஆய்வுகளிலும், பானத்தை அருந்துவதற்கு முன் காத்திருக்கும் நேரம் மற்றும் அது ஏற்படுத்தும் வெப்ப பாதிப்பு போன்ற காரணிகள் கவனிக்கப்பட்டுள்ளன.

55
தேநீர் காபி ஆபத்து

தேநீர், காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதன் அளவு மட்டுமல்ல, குடிக்கும் வெப்பநிலையையும் கவனிப்பது நல்ல பழக்கமாக இருக்கும். குறிப்பாக நாக்கு அல்லது வாயைச் சுடும் அளவுக்கு பானம் இருந்தால் உடனே குடிப்பதைத் தவிர்க்கலாம். மிகவும் சூடான பானங்களை தொடர்ந்து குடிப்பதை குறைப்பது உணவுக்குழாய்க்கு ஏற்படும் வெப்ப பாதிப்பைத் தவிர்க்க உதவும். ஆனால் இதை மட்டும் வைத்து புற்றுநோய் அபாயத்தை முழுமையாக தீர்மானிக்க முடியாது. புகைபிடித்தல், மதுபானம் உள்ளிட்ட பல காரணிகளும் உணவுக்குழாய் புற்றுநோயுடன் தொடர்புடையவை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories