Published : Oct 29, 2024, 12:19 PM ISTUpdated : Oct 29, 2024, 12:21 PM IST
Banana Peel Teeth Whitening : உங்களது பற்கள் மஞ்சள் நிறமாகவும், கறையாகவும் இருந்தால் அவற்றை வெண்மையாக மாற்ற வாழைப்பழத் தோலை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
பற்கள் நமது முகத்தின் அழகு மற்றும் நமது ஆளுமையின் முக்கிய அங்கமாக வகிக்கிறது. பற்கள் வெண்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால் நம் தன்னம்பிக்கை கூட அதிகரிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். பற்களை சுத்தமாக வைக்காமல் இருப்பது, டீ அல்லது காபி அதிகம் குடிப்பது, புகையிலை அல்லது சிகரெட் குடிப்பது அல்லது வயதாகும்போது பற்களின் நிறம் மங்கிப் போவது போன்ற பல காரணங்கள் மஞ்சள் பற்களுக்கு பின்னால் இருக்கும்.
25
Banana Peel Teeth Whitening In Tamil
அந்த வகையில் உங்களது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் அவற்றை வெண்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற விரும்பினால் அதற்கு விலையுயர்ந்த சிகிச்சை தேவையில்லை. வீட்டிலேயே சில இயற்கை வைத்தியங்களின் உதவியுடன் உங்கள் பற்களின் வெண்மையை மீட்டெடுக்கலாம். நீங்கள் வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம். எனவே மஞ்சள் நிற பற்கள் வெண்மையாக வாழைப்பழத் தோலை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
வாழைப்பழத் தோலை வைத்து பற்களை வெண்மையாக்குவது எப்படி?
வாழைப்பழ தோலில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கோள் உள்ளன. அவை பற்களை வெண்மையாக பெரிதும் உதவும். ஆனால் நீங்கள் வெறும் வாழைப்பழத் தோலை விட அதனுடன் வேறு ஏதாவது ஒன்றை சேர்த்தால் சிறந்த முடிவுகளை பெற முடியும். இதற்கு வாழைப்பழ தோலுடன் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.
45
Banana Peel Teeth Whitening In Tamil
பயன்படுத்தும் முறை :
முதலில் வாழைப்பழத் தோலை எடுத்து அதன் உள்பகுதியில் பற்களில் தேய்க்க வேண்டும். தோலில் மேலிருந்து கீழாக வட்ட இயக்கத்தில் தேய்த்தால் அதன் சத்துக்கள் பற்களில் சரியாக பொருந்தும்.
இப்போது ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை வாழைப்பழத்தோலுடன் சேர்த்து பற்களில் தடவவும். பற்களில் சுமார் இரண்டு மூன்று இடத்தில் விட்டு விட்டு சாதாரண நேரில் கழுவும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
வாழைப்பழத்தோலில் காணப்படும் தாதுக்கள் பற்களின் மேற்பரப்பை அடைந்து மஞ்சள் நிறத்தை குறைக்கிறது. அதே நேரத்தில் பேக்கிங் சோடா ஒரு இயற்கை ஸ்கிரப்பராக செயல்படுகிறது. இது பற்களின் மேல் அடுக்கில் உள்ள கறைகளை அகற்ற பெரிதும் உதவுகிறது. இது தவிர பேக்கிங் சோடாவில் அல்கலைன் பண்புகள் பற்களின் மஞ்சள் நிறத்தை குறைக்க உதவுகிறது.
நினைவில் கொள் :
இவற்றை நீங்கள் செய்வது மட்டுமில்லாமல் பற்களை தவறாமல் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அதிகப்படியான டீ, காபி சிகரெட் ஆகியவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவை மஞ்சள் நிற பற்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும். அதுபோல பற்களின் வெண்மையை பராமரிக்க அவ்வப்போது பல் மருத்துவர் அணுகவும்.