Spicy Mustard Rasam: நாக்குக்கு ருசியான சுடச்சுட கடுகு ரசம்.! ஜலதோஷம் காணாமல் போகும்.! இப்படி செஞ்சு பாருங்க.!

Published : Nov 10, 2026, 03:11 PM IST

பண்டிகை நாட்களில் இனிப்பு சாப்பிட்டு போர் அடித்திருந்தால், நாக்குக்கு ருசியாக காரசாரமான கடுகு ரசம் வைத்து சாப்பிடலாம். வெறும் 5 நிமிடங்களில் தயாராகும் இந்த ரசம் சூடான சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

PREV
15
புத்துணர்ச்சி தரும் காரமான கடுகு ரசம்

தீபாவளி போன்ற பெரிய பண்டிகை நாட்களில் வீடுகளில் விதவிதமாக இனிப்புகள் செய்வது வழக்கம். இரண்டு மூன்று நாட்களாக இனிப்பு சாப்பிட்டு போர் அடித்திருந்தால், நாக்குக்கு சுவையான காரமான கடுகு ரசம் (Mustard Spicy Rasam) செய்து சாப்பிடுங்கள். வெறும் 5, 6 நிமிடங்களில் இதை செய்துவிடலாம்.

25
கடுகு ரசம் செய்ய தேவையான பொருட்கள்

1 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், 6-8 பல் பூண்டு, 2 பச்சை மிளகாய், 5-6 கறிவேப்பிலை, 7-8 குறுமிளகு, 1 டீஸ்பூன் எண்ணெய், பாக்கு அளவு புளி, தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி தழை.

35
கடுகு ரசம் செய்முறை

முதலில் கடுகு மற்றும் மிளகை கடாயில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும். பின்னர் பூண்டு தோலை உரித்துக்கொள்ளவும். இப்போது கடுகு, மிளகு, பூண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நசுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி, புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

45
தாளிப்பது எப்படி?

அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் சீரகம் சேர்க்கவும். பின் நசுக்கி வைத்துள்ள கடுகு, மிளகு, பூண்டு கலவையை சேர்க்க வேண்டும். இதோடு நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

55
சூடான காரமான கடுகு ரசம் தயார்

தாளித்த வாசனை வந்தவுடன், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். 3-4 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து, நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவினால், ருசியான காரமான கடுகு ரசம் தயார். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories