வாஷிங் மெஷின் வீட்டு வேலைகளை எளிதாக்கினாலும், எல்லா துணிகளையும் அதில் துவைக்க முடியாது. சிப்பி முத்து, கம்பளி, ஜரிகை ஆடைகள் துணிகளை போடுவதால், ஆடைகள் சேதமடைவதோடு வாஷிங் மெஷினும் பழுதடைய வாய்ப்புள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலையையும் சிக்கிரமாக இயந்திரமே செய்து விடுகிறது. குறிப்பாக வாஷிங் மெஷின் என்பது இன்றைய வீட்டுத் தேவைகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு துணியாக இருந்தாலும் எந்த அலைச்சல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் துணியை எளிதாக துவைக்க முடிகிறது. ஆனால், வாஷிங் மெஷினில் எல்லா வகையான துணிகளையும் துவைக்க கூடாது தெரியுமா? அப்படி துவைத்தால் துணிகள் விரைவில் கிழிவதோடு, நிறங்கள் மங்குவதும், சோப்பு படிமங்கள் படிவதும் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
28
வாஷிங் மெஷினில் எந்த துணி போடக்கூடாது
ஆனால், எந்தெந்த ஆடைகளை வாஷிங் மெஷினில் துவைக்க கூடாது என்று நம்மில் பலருக்கு தெரியாது. எனவே, வாஷிங் மெஷினில் அப்படி எந்த மாதிரியான துணிகளை துவைக்க கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
38
சிப்பி முத்து ஆடைகள்
வாஷிங் மெஷினில் சிப்பி மற்றும் முத்துக்கள் பதித்த ஆடைகளை துவைக்க கூடாது. அவற்றை வாஷிங் மெஷினில் துவைக்கும் போது அவைகள் உடைந்து, ஆடையில் நூல் நூலாக வர ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி வாஷிங்மெஷினும் பழுதடைந்து விடும்.
கம்பளி ஆடைகள் ரொம்பவே மென்மையானது என்பதால் அவற்றை ஒருபோதும் வாஷிங் மெஷினில் துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதமடையக் கூடும். எனவே அவற்றை கைகளால் லேசாக சோப்பு போட்டு துவைக்க வேண்டும்.
58
ரெயின்கோட்
ரெயின் கோட் வாட்டர் ப்ரூப் என்பதால் அதை வாஷிங் மிஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் ரெயின் கோட் பலூன் போல் விரிவடைந்து விடும். அதுமட்டுமின்றி ரெயின் கோட் கிழிந்து விடும். இது தவிர வாஷிங் மெஷின் பழுதடைவதற்கான வாய்ப்பு உள்ளது.
68
எண்ணெய் ஆல்கஹால் கறை ஆடைகள்
துணிகளில் கறைகள் வருவது சகஜம். ஆனால் சமையல் எண்ணெய், பெட்ரோல், ஆல்கஹால், மோட்டார் கறை போன்ற கறைகள் உள்ள துணிகளை ஒருபோதும் வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் வாஷிங் மெஷினில் தீ பற்றக் கூடும்.
78
ஜரிகை ஆடைகள்
ஜரிகை அடுக்குகள் மென்மையானது என்பதால் அவற்றை வாஷிங் மிஷினில் போட்டு துவைக்க கூடாது. இல்லையெனில் அவை சேதம் அடைந்துவிடும். எனவே அவற்றை கைகளால் துவைப்பது தான் நல்லது.
88
ஆடம்பரமான ப்ரா
வாஷிங் மெஷினில் மிக விலை உயர்ந்த ஆடம்பரமான மற்றும் சருகை அல்லது பேக் செய்யப்பட்ட ப்ராக்களை ஒருபோதும் துவைக்க கூடாது. அதுவும் குறிப்பாக, அண்டர்வயருடன் இருக்கும் ப்ராவை துவைக்கவே கூடாது. இல்லையெனில் அவை கிழிந்துவிடும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.