நல்ல தரமான பிளாஸ்டிக் பாட்டில்கள் உடல்நலத்துக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால்தான், ஸ்கூல் போற குழந்தைங்க, ஆபீஸ் போறவங்கன்னு நிறைய பேர் இதை பயன்படுத்துறாங்க. ஆனா, பாட்டிலை சரியா சுத்தம் செய்யலைன்னா, அதுல அழுக்கு, பாக்டீரியா, கெட்ட வாடை, மஞ்சள் கறை எல்லாம் படிஞ்சிடும். இது நம்ம ஆரோக்கியத்துக்கு ஆபத்து.
26
வாசனை, அழுக்கு எதுவுமே இருக்காது
வீட்ல இருக்கிற பாட்டில்களை எப்படி ஈஸியா சுத்தம் செய்றதுன்னு பார்க்கலாம். இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா, உங்க பாட்டில் சுத்தமாகுறது மட்டுமில்ல, புதுசு மாதிரி பளபளன்னு ஜொலிக்கும். கூடவே, எந்த கெட்ட வாடையும், அழுக்கும் இருக்காது.
36
முதலில் பிரஷ் கொண்டு சுத்தம் செய்யுங்கள்
முதல்ல, ஒரு பிரஷ்ஷை வெச்சு பாட்டிலோட உள்பக்கத்தை நல்லா சுத்தம் செய்யுங்க. இதுக்கு, பாத்திரம் தேய்க்கிற சோப் அல்லது லிக்விட் பயன்படுத்தி நல்லா நுரை வர வெச்சு, அப்புறமா பிரஷ்ஷால உள்ளே தேயுங்க.
உங்க பாட்டில் புதுசு மாதிரி ஜொலிக்க, உப்பும் எலுமிச்சையும் பயன்படுத்தலாம். பாட்டிலில் 1-2 ஸ்பூன் உப்பு போட்டு, அதுல பாதி எலுமிச்சையைப் பிழிஞ்சு விடுங்க. பிறகு, கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நல்லா குலுக்குங்க. இது பாட்டிலை சுத்தம் செய்றதோட, பாக்டீரியா, கெட்ட வாடை எல்லாத்தையும் நீக்கிடும்.
56
இப்படியும் சுத்தம் செய்யலாம்
பாட்டிலை சுத்தம் செய்ய, 4 ஸ்பூன் வினிகர் கூட 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்துக்குங்க. பிறகு, அதுல வெதுவெதுப்பான தண்ணீர் ஊத்தி, பாட்டிலை 15 நிமிஷம் அப்படியே விட்டுடுங்க. இது பாட்டிலை முழுசா சுத்தம் செஞ்சு, பாக்டீரியாவையும் கெட்ட வாடையையும் நீக்கிடும்.
66
மூடி மற்றும் ஸ்ட்ராவை தனியாக சுத்தம் செய்யுங்கள்
பாட்டிலோட மூடி, ஸ்ட்ரா இதையெல்லாம் தனியா கழற்றி சுத்தம் செய்யுங்க. ஏன்னா, அதுக்குள்ளயும் பாக்டீரியா சேர வாய்ப்பிருக்கு. இதை சுத்தம் செய்ய, ஒரு சின்ன பிரஷ், சோப் கலந்த தண்ணீர் பயன்படுத்துங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.