Navratri: நவராத்திரியின் ஒன்பது நாள் கொண்டாட்டத்தில்...முப்பெரும் தேவியர்கள் வழிபாடு ஏன் சிறப்பு வாய்ந்தது..?

First Published Sep 19, 2022, 1:43 PM IST

Navratri 2022: நவராத்திரித் திருவிழா என்பது மக்களை துன்புறுத்திய மகிசாசுரன் என்ற கொடிய அரக்கனை, அன்னை பராசக்தி வதம் செய்து வெற்றி கொண்ட நாளை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. பெண் தெய்வத்தைப் போற்றி வணங்கும் திருவிழாக்களில் முதலிடம் வகிப்பது இந்த நவராத்திரித் திருவிழா தான். இந்த நவராத்திரி பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பத்து நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரித் திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு இனத்திலும் பல்வேறு விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது .இந்த நாட்களில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. இந்த நவராத்திரி நாளில், இந்துக்கள் அனைவரும் கூடுமானவரை, அன்னைதுர்கா தேவியை மனமுருக வேண்டி பூஜை செய்வது சிறந்தது. இதனால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வாழ்வில் சகல வித நன்மைகளுக்கும் வந்து சேரும் என்பது ஐதீகம். இந்த நவராத்திரித் பண்டிகை பற்றி சில வியவைக்கும் உண்மைகள் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

 மேலும் படிக்க..Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி..குபேரனின் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

நவராத்திரி பண்டிகை வரலாறு:

அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் மூன்று லோகங்கலான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில், அன்னை பராசக்தி மகிசாசுரனுடன் 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் வழிபடத்துவங்கினர்.

முப்பெரும் தேவியர்கள்
 
இந்து புராணங்கள் படி, நவராத்திரித் திருவிழா என்பது மூன்றாக காட்சி தரும் அன்னை பராசக்தியை, முப்பத்து முக்கோடியாக இருக்கும் முப்பெரும் தேவியர்களாக வணங்கி கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது. ஆம், முதல் மூன்று நாட்களுக்கு சக்தியை அருளும் அன்னை  பரமேஸ்வரியாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு செல்வத்தை அருளும்  மகாலஷ்மியையும், கடைசி மூன்று நாட்களில் கல்விக்கு அதிபதியான அன்னை சரஸ்வதி தேவியை பூஜிக்கிறோம். 

ஆனால், உண்மையில் அன்னையை நவசக்திகளாக பாவித்து, குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என ஒன்பது சக்திகளாக பாவித்து பூஜித்து, இந்த ஒன்பது சக்திகளுக்கான மூல காரணியான பராம்பிகையை உரிய முறையில் தியான மந்திரங்களால் தியானித்து, பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் ஆகியவற்றை செய்ய வேண்டும்.

 மேலும் படிக்க..Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி..குபேரனின் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

வழிபாட்டு பலன்கள்:

நவராத்திரி நாட்களில் பெண்கள் நவராத்திரி பூஜை செய்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் செல்வ வளமும் பெருகும். இந்த நாளில் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவிகளாக ரூபம் கொண்டு நீங்கள் வேண்டிய வரம் தருகிறார்கள். நவராத்திரி நாட்களில், மாலை 7 மணி முதல் இரவு 9:30 மணி வரை தேவி வழிபாட்டுக்கு உகந்த நேரமாகும். 9 நாட்களும் இந்த  நவராத்திரி பூஜை செய்தால் முழு பலனும் கிடைக்கும். 

 மேலும் படிக்க..Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி..குபேரனின் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

click me!