Reduce Electricity Bills: ஏசி ஓடும்போது ஃபேன் போடலாமா, வேண்டாமா? கரண்ட் பில்லை 20% குறைக்கும் ரகசியம்!

Published : May 30, 2026, 03:37 PM IST

AC Vs Fan: ஃபேனையும் சேர்த்துக் போட்டால் கரண்ட் பில் எகிறிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஏசியுடன் ஃபேனைச் சரியான முறையில் பயன்படுத்தினால் மின்சாரக் கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும்.

PREV
15
ஏசி ஓடும்போது ஃபேனை போடலாமா வேண்டாமா?

கோடைகாலம் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கும் எழும் சந்தேகம் என்னவென்றால் ஏசி ஓடும்போது ஃபேனை போடலாமா வேண்டாமா? என்பதுதான். ஃபேனையும் சேர்த்துக் போட்டால் கரண்ட் பில் எகிறிவிடும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஏசியுடன் ஃபேனைச் சரியான முறையில் பயன்படுத்தினால், அறை முழுவதும் குளுமை பரவுவதுடன் மின்சாரக் கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும் என்பது தான் உண்மை.

25
ஃபேன் உண்மையில் என்ன செய்கிறது?

முதலில் ஃபேன் வேலை செய்யும் விதத்தைப் புரிந்துகொள்வது அவசியம். ஃபேன் என்பது அறையைக் குளிர்விக்கும் சாதனம் அல்ல; அது அறையில் இருக்கும் காற்றைச் சுழலச் செய்து, அறை முழுவதும் பரப்பும் வேலையை மட்டுமே செய்கிறது.

35
ஏசியுடன் ஃபேன் இணையும் போது நடக்கும் மேஜிக்

ஏசியிலிருந்து வரும் குளிர்ந்த காற்று கனமாக இருப்பதால், அது அறையின் கீழ் பகுதியிலேயே தங்கிவிடும். அப்போது ஃபேனை ஓடவிடும் போது, அந்த ஜிலுஜிலு காற்றை அறை முழுவதும் சமமாகச் சுழல வைக்கிறது. ஏசி காத்து நேரடியாகப் படாத மூலைகளுக்கும் குளுமை பரவுவதால், அறையில் இருக்கும் அனைவருக்கும் சீரான குளிர்ச்சி கிடைக்கும்.

45
கரண்ட் பில்லை 20% வரை குறைப்பது எப்படி?

மின்சாரத்தை மிச்சப்படுத்த ஏசியையும் ஃபேனையும் ஒரே நேரத்தில் இயக்குவது ஒரு புத்திசாலித்தனம். ஏசியை வழக்கம் போல 18 டிகிரி செல்சியஸ் அல்லது 20 டிகிரி செல்சியஸ் வைக்காமல், 24 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் போன்ற மிதமான வெப்பநிலையில் செட் செய்யுங்கள். ஏசியை 24 டிகிரி செல்சியஸ் அல்லது 24 டிகிரி செல்சியஸ் வைத்துவிட்டு, கூடவே ஃபேனை குறைந்த அல்லது மிதமான வேகத்தில்ஓடவிடுங்கள்.

55
கணக்கீடு :

ஜோர்டான் மற்றும் சர்வதேச ஆற்றல் நிபுணர்களின் கூற்றுப்படி, ஏசியின் வெப்பநிலையை ஒவ்வொரு ஒரு டிகிரி செல்சியஸ் உயர்த்தும் போதும், சுமார் 6% மின்சாரம் சேமிக்கப்படுகிறது. இந்த விதியின்படி, ஏசியை 24 டிகிரி செல்சியஸ் வைத்துவிட்டு ஃபேனைப் பயன்படுத்தும் போது, அது நமக்கு 24 டிகிரி செல்சியஸ் அல்லது 22 டிகிரி செல்சியஸ்க்கான குளுமையைத் தந்துவிடும். இதன் மூலம் உங்கள் மாதாந்திர ஏசி கரண்ட் பில்லில் 15% முதல் 20% வரை தாராளமாக மிச்சப்படுத்தலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories