Rice Storage Hacks: அரிசியில் வண்டா..? இனி கவலையே வேண்டாம்... இதோ செம்ம சிம்பிள் கிச்சன் ஹேக்ஸ்..!

Published : Jul 23, 2026, 09:45 AM IST

How to Remove Insects from Rice: அரிசி டப்பாவைத் திறந்ததும் வண்டுகள் ஊர்வதைப் பார்த்து பல இல்லத்தரசிகள் கவலைப்படுவார்கள். ஆனால், வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு அரிசியை நீண்ட நாட்கள் வண்டு வராமல் பாதுகாக்கலாம்.

PREV
15
அரிசியில் வண்டு வருகிறதா..?

வீட்டில் வாங்கி வைத்திருக்கும் அரிசியில் திடீரென வண்டுகள் தோன்றுவது பல இல்லத்தரசிகளுக்கும் தலைவலியாக மாறிவிடுகிறது. குறிப்பாக, மழைக்காலம் மற்றும் அதிக ஈரப்பதம் நிறைந்த நாட்களில் இந்தப் பிரச்சினை அதிகமாக இருக்கும். அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களில் சிறிய கருப்பு நிற வண்டுகள் தோன்றினால், அவற்றை உடனடியாக அகற்றுவது அவசியம். இல்லையெனில், உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.

ஆனால், இதற்காக விலையுயர்ந்த ரசாயனப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி, அரிசியில் வண்டு வராமல் தடுக்க முடியும்.

25
பிரியாணி இலை – இயற்கையான தீர்வு

அரிசி டப்பாவில் இரண்டு அல்லது மூன்று பிரியாணி இலைகளைப் போட்டு வைத்தால், அதன் மணம் காரணமாக வண்டுகள் நெருங்காது. மாதத்திற்கு ஒருமுறை இலைகளை மாற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டு பற்கள் உதவும்

சில பூண்டு பற்களை தோலுடன் சேர்த்து அரிசி டப்பாவில் வைத்தால், வண்டுகள் உருவாகும் வாய்ப்பு குறையும். பூண்டின் இயற்கை வாசனை பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது.

35
மிளகு மற்றும் கிராம்பு

மிளகு மற்றும் கிராம்புகளைச் சிறிய துணிப்பையில் கட்டி அரிசிக்குள் வைத்தால், பூச்சிகள் மற்றும் வண்டுகள் வராமல் தடுக்கலாம். இது பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையாகும்.

45
வெயிலில் காய வைப்பது அவசியம்

ஏற்கனவே வண்டு வந்திருந்தால், அரிசியை ஒரு பெரிய தட்டில் பரப்பி சில மணி நேரம் வெயிலில் காய வைக்கலாம். இதனால் வண்டுகள் வெளியேறுவதுடன், ஈரப்பதமும் குறையும்.

காற்று புகாத டப்பாக்களைப் பயன்படுத்துங்கள்

அரிசியை எப்போதும் காற்று புகாத பிளாஸ்டிக் அல்லது ஸ்டீல் டப்பாக்களில் சேமித்து வைப்பது நல்லது. ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வண்டுகள் விரைவில் உருவாகும் என்பதால், டப்பாவை உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

55
ஃபிரிட்ஜ் டிப்ஸ்

சிறிய அளவில் அரிசியைப் பயன்படுத்துபவர்கள், அரிசியை ஒரு நாள் ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் டப்பாவில் சேமிக்கலாம். இதனால் வண்டு முட்டைகள் இருந்தாலும் அவை வளராது.

சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அரிசியை நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இந்த எளிய வீட்டு டிப்ஸ்களைப் பின்பற்றினால், அரிசியில் வண்டு வருவதை எளிதாகத் தடுக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories