கொசு கடித்தால் கடுமையான அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படும். இதைப் போக்க சில சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
பொதுவாக கொசு கடித்த பகுதியில் கடுமையான அரிப்பு, வீக்கம் மற்றும் சிவப்பு தடிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் அரிப்பு தீவிரமாக இருந்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் வெட்டுப்பட்டு ரத்தம் கூட வரலாம். ஆனால் கொசு கடித்த பிறகு ஏற்படும் அரிப்பை போக்க சில பயனுள்ள மற்றும் சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல பலன் தரும்.
26
ஐஸ்கட்டி ஒத்தடம் :
கொசு கடித்த பகுதியில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வீக்கம் அரிப்பு நீங்கும். இதற்கு ஃப்ரீசரில் இருந்து உடனே ஐஸ்கட்டியை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒருவேளை உடலில் ஏராளமான கொசுக்கள் கடித்திருந்தால் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
36
உப்பு பெஸ்ட் சாய்ஸ் !
கொசு கடித்த பிறகு அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் பெற உங்களுக்கு உதவியாக இருக்கும். இதற்கு பாதிக்கப்பட்ட பகுதியை முதலில் தண்ணீரில் நனைத்து அதன் பிறகு அதன் மீது சிறிதளவு உப்பு சேர்த்து மெல்லமாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் அரிப்பு தடிப்புகள் நீங்கும்.
கற்றாழை ஜெல் குளிர்ச்சியான விளைவை கொண்டுள்ளன. இது எரிச்சல் மற்றும் அரிப்பை போக்க உதவுகிறது. எனவே கொசு கடித்த இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவினால் அரிப்பு குறைந்து விடும். அதுபோல இரத்தப்போக்கு ஏற்பட்டால் கூட அதுவும் விரைவில் ஆறிவிடும். ஏனெனில் கற்றாழை ஜெல் காயங்களை குணப்படுத்தும் மற்றும் தொற்றுக்களை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டுள்ளன.
56
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், அவை கொசு கடிப்பதால் ஏற்படும் அரிப்பை போக்க உதவுகிறது. இதற்கு கொசு கடித்த இடத்தில் எலுமிச்சை சாற்றை சிறிதளவு தளவினால் போதும். அரிப்பு குறைந்து விடும் மற்றும் தொற்றுகள் ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக எலுமிச்சை சாறு பயன்படுத்திய பிறகு உடனே வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது. ஏனெனில் சூரிய ஒளிப்பட்டால் கொப்புளங்கள் வந்துவிடும்.
66
வாழைப்பழத் தோல் பயன்பாடு :
கொசு கடித்த இடத்தில் அரிப்பு, சிவப்பான தடுப்புகள், வீக்கம் ஏற்படும். அதைப்போக்க பாதிக்கப்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை நன்கு தேய்க்க வேண்டும். இதனால் அரிப்பு, வீக்கம், தடிப்புகள் குறையும்.