நார்ச்சத்து குறைவாக உட்கொள்வது (குறிப்பாக மலச்சிக்கலுடன் சேரும் போது) செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும், நார்ச்சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகிறது. இந்த பாக்டீரியாக்கள் நார்ச்சத்தை நொதிக்க வைத்து 'குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை' (Short-Chain Fatty Acids) உருவாக்கி, குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.
இயற்கையான நார்ச்சத்தைப் பெற என்ன சாப்பிடலாம்?
பழங்கள் - கொய்யாப்பழம், பேரிக்காய், தோலுடன் கூடிய ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பெர்ரி பழங்கள்.
காய்கறிகள் - கேரட், பச்சை பட்டாணி, புரோக்கோலி, பீன்ஸ் மற்றும் கீரை வகைகள்.
பருப்பு வகைகள் - சுண்டல், ராஜ்மா, கருப்பு பீன்ஸ், பாசிப்பருப்பு மற்றும் மைசூர் பருப்பு.
முழு தானியங்கள் - ஓட்ஸ், முழு கோதுமை மாவு, பார்லி, சிவப்பு/பழுப்பு அரிசி (Brown Rice) மற்றும் சிறுதானியங்கள்.
கொட்டைகள் மற்றும் விதைகள் - பாதாம், நிலக்கடலை, சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகள் (Flaxseeds)