சுறுசுறுப்பாக இருக்க நடைப்பயிற்சியே எளிய வழிகளில் ஒன்றாகும். இந்நிலையில், உடல் தோரணையை (Posture) மேம்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், முழங்கால்களைப் பாதுகாக்கவுமான 5 எளிய நடைப்பயிற்சி முறைகளை பற்றி பார்போம். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த 5 எளிய நடைப்பயிற்சிகள் உங்கள் உடல் வலிமை, தோரணை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்கள் உடலின் எடையை மட்டுமே பயன்படுத்தி இதைச் செய்யலாம்.
கால் விரல் நடை (Toe Walk / தாடாசனா) - உடல் தோரணையை மேம்படுத்தும், விறைப்பைக் குறைக்கும் & நம்பிக்கையை அதிகரிக்கும். (1 நிமிடம்)
உப்புக் கால் அல்லது குதிக்கால் நடை (Heel Walk) - கணுக்காலை வலுவாக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், வீக்கத்தைப் போக்கும். (1 நிமிடம்)
இடுப்பு சுழற்சி நடை (Hip Rotation Walk) - இடுப்பு இறுக்கத்தைத் தளர்த்தும், முதுகுவலியைக் குறைக்கும், நெகிழ்வுத்தன்மையை உணரச் செய்யும். (1 நிமிடம்)
பக்கவாட்டு நடை (Side-to-Side Walk) - தொடைத் தசைகளை உறுதியாக்கும், இடுப்பை வலுப்படுத்தும், சமநிலையை அதிகரிக்கும். (1 நிமிடம்)
பின்னோக்கி நடத்தல் (Reverse Walk) - முழங்கால்களைப் பாதுகாக்கும், சமநிலையை மேம்படுத்தும் & மூட்டு வலியைத் தடுக்கும். (2-5 நிமிடங்கள்)