
நீட்டா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆசியாவின் பணக்கார குடும்பம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அம்பானி குடும்பத்தின் தூணாக விளங்கும் நீட்டா அம்பானி தனது தொண்டு பணிகளுக்காகவும், தனது சித்தாந்தங்களுக்காகவும் பெயர் பெற்றவர். இருப்பினும், அவர் மிகவும் அழகான இந்திய உடைகளை அணிவதில் பிரபலமானவர். ஆனால் நீட்டா அம்பானியிடம் உள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
நகைகள் என்றால் எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது. அதில் நீட்டா அம்பானி மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு தனது மகள் இஷா அம்பானியின் திருமண நாளன்று நீட்டா அம்பானி, முழு வைர நகைகளை அணிந்திருந்தார்.
இந்திய ஆடையோ அல்லது மேற்கத்திய ஆடையோ அந்த ஆடையாக இருந்தாலும் வைரங்கள் அழகாக இருக்கும். ஆனால் நீட்டா அம்பானியின் பிரம்மாண்ட வைர மூக்குத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
விலைமதிப்பற்ற நகைகளை சேகரிப்பது மட்டுமின்றி, சில விலையுயர்ந்த புடவைகளை சேகரித்து வைப்பதற்கும் பெயர் பெற்றவர் நீட்டா அம்பானி. 2015 ஆம் ஆண்டில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பரிமல் நத்வானியின் மகனின் திருமணத்திற்காக நிதா அம்பானி மிகவும் விலையுயர்ந்த புடவையை அணிந்திருந்தார்.
இந்தப் புடவையை வடிவமைத்தவர் சென்னை சில்க்ஸ் இயக்குநர் சிவலிங்கம். அவரின் பிளவுசின் பின்புறத்தில் கிருஷ்ணரின் உருவத்தை கொண்டுள்ளது. கிருஷ்ணரின் உருவம் பல்வேறு வண்ணங்கள் மற்றும் சிக்கலான எம்பிராய்டரிகளைப் பயன்படுத்தி எம்ப்ராய்டரி செய்யப்பட்டது.
நீட்டா அம்பானியின் வெள்ளை மற்றும் பிங்க் நிற புடவை உண்மையான தங்க நூல்களால் ஆனது, மேலும் அதில் வைரங்கள் மற்றும் மரகதம், மாணிக்கங்கள், புக்ராஜ் போன்ற பல விலைமதிப்பற்ற கற்கள் உள்ளன. ஆனால், புடவையின் விலைதான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. புடவையின் விலை ரூ. 40 லட்சம் என்று கூறப்படுகிறது. நீட்டா அம்பானியின் அலமாரியில் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருட்களில் இதுவும் ஒன்று.
இதுதவிர பழமையான வைர நெக்லஸ்கள், பாரம்பரிய தங்க நகைகள் மற்றும் அரிய வைர மோதிரங்கள் என கோடிக்கணக்கான ஆபரணங்களை வைத்துள்ளார். நீட்டா அம்பானியின் நகைகள் பல நூறு கோடி மதிப்புடையவை ஆகும்