
உலக பணக்காரர்களுள் முக்கிய இடம் வகிப்பவர், முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீதா அம்பானி. போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலதிபரும் கூட. நீதா அம்பானி குறிப்பிட்டத்தகுந்த வகையில் செயலாற்றி வருபவர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பின என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
தொழில்ரீதியாக எப்படி கவனமாக செயல்படுகிறாரோ அதைப் போலவே தன்னை கவனிப்பதிலும் அவர் கில்லாடி. அவர் விழா காலங்களில், சுப நிகழ்ச்சிகளில் அணியும் புடவைகள் கூட தனித்துவமானவை. பல சிறப்புகளை கொண்டுள்ள அந்த புடவைகளின் விலையும் அதிகம். இங்கு அவருடைய புடவை, அழகுக்கு அவர் செய்யும் செயல்கள் குறித்து காணலாம்.
நீதா அம்பானி தான் அணியும் புடவைகளில் அதிக கவனம் செலுத்துவார். அவர் அணிந்த 40 லட்சம் மதிப்பிலான புடவை அதிகம் பேசப்பட்டது. இவருடைய ஒரு புடவை அதன் விலை காரணமாக, உலகிலே விலையுர்ந்த புடவை என கின்னஸில் இடம்பெற்றுள்ளது. இவ்வளவு விலையுர்ந்த புடவையில் அப்படி என்ன இருக்கிறது என தோன்றுகிறதா? அந்த புடவை தங்க ஜரிகை வேலைபாடுகளால் அழகூட்டப்பட்டிருந்தது. அதனுடைய ஜாக்கெட்டில் தனித்துவமான ஓவியம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அது மட்டுமின்றி இந்தியாவின் மதநம்பிக்கையில் ஒன்றான சிவலிங்கம் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த வேலைபாடுகளுக்கு தமிழகத்தின் புகழ் மிகுந்த காஞ்சி பட்டு, தங்க கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. இத்தோடு முடியவில்லை, புடவை ஜொலிஜொலிக்கும் வண்ணம் எமரால்டு, ரூபி, புஷ்பராகம், முத்து போன்ற விலையுர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. புடவைக்கே இவ்வளவு மெனக்கெடுபவர் தன்னுடைய சரும பளபளப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பார். வாங்க தெரிந்து கொள்ளலாம்.
நீதா அம்பானி இளமை ரகசியம்;
நீதா அம்பானி கோடீஸ்வரர் என்பதால் தனது சருமத்தை பராமரிப்பதற்காக பல கோடிகளை செலவு செய்வார் என்று பொதுவாக எண்ணம் தோன்றலாம் ஆனால் அவர் இயற்கையான வழிகளில் தன்னை பராமரித்துக் கொள்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ஆனால் அதுதான் உண்மை அவர் தன்னுடைய சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க சில பானங்களை தொடர்ந்து அருந்தி வருகிறார் என தகவல்கள் காணக் கிடைக்கின்றன
நீதா அம்பானி தன்னுடைய இளமையான தோற்றத்திற்காக பீட்ரூட் சாறு அருந்துவதாக சொல்லப்படுகிறது. இந்த பீட்ரூட் சாறு அவருடைய சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. ஏனென்றால் இந்த பீட்ரூட் சாறில் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி போன்றவை உள்ளன. இது முகப்பொலிவை தருவதோடு நீண்ட காலம் வயதான தோற்றம் இல்லாமல் இளமையாக இருக்கவும் உதவும்.
பீட்ரூட் ஜூஸின் நன்மைகள்:
பீட்ரூட்டில் அதிகமான ஈரப்பதம் காணப்படுவதால் இது நமது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நம்முடைய சருமம் மென்மையாக மாறும். இதனுடன் தேன் கலந்து அருந்துவதால் கூடுதலாக முகப்பொலிவு அடையலாம்.
பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடிப்பதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். முகம் பிரகாசமாக மாறும். தினமும் காலையில் குடிப்பதால் அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுவதால் சருமம் பளபளப்பாக மாறுகிறது. நீதா அம்பானியின் பளபளப்பான முகத்தோற்றத்திற்கு இந்த ஜூஸ் தான் காரணம் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஆத்தி.. நீதா அம்பானியின் சம்பளம் இவ்வளவா? ஷாக் ஆகாம படிங்க..
எப்படி தயார் செய்வது?
பீட்ரூட்டை தோல் சீவி நன்கு கழுவி கொள்ளுங்கள். அதனை சில நிமிடங்கள் தண்ணீரில் ஊறவிட்டு பின்னர் அதனை நறுக்கி மிக்ஸி ஜாரில் உப்பு, தேன் கலந்து அரைத்து கொள்ளுங்கள். இதனை வடிகட்டி அருந்துவதால் உடலில் பல மாற்றங்களை உணர்வீர்கள். உங்களுக்கும் நீதா அம்பானி போல பளபளப்பான முகத்தோற்றம் வாய்க்கும்.
இதையும் படிங்க: இதை ஃபாலோ பண்ணி தான் 18 கிலோ எடை குறைச்சாங்களாம்! நீதா அம்பானியின் ஃபிட்னஸ் சீக்ரெட்!