காய்கறி செடிகளை வளர்க்க பெரிய இடம் வேண்டும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால் உண்மையில உங்கள் சிறிய பால்கனியில் கூட காய்கறி செடிகளை வளர்க்க முடியும். கொஞ்சம் வெயில், தினமும் கொஞ்சம் தண்ணீர் இருந்தாலே போதும். இது இருந்தால் போதும் உங்கள் வீட்டுலேயே நீங்களே ஒரு கிச்சன் கார்டனை ஆரம்பித்து விடலாம். இந்த கோடைக்காலத்தில் பால்கனியில சுலபமா வளர்க்கக்கூடிய சில காய்கறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
26
கத்தரிக்காய் (Brinjal) / புதினா (Mint)
கத்தரிச் செடியில் காய் வைக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் ஒரு தடவை செட் ஆகிட்டால் போதும், தொடர்ந்து காய் கொடுக்கும். இதற்கு கொஞ்சம் பெரிய தொட்டியும், நல்ல வெயிலும் தேவை. கோடைக்காலத்தில் கத்தரிக்காய் நன்றாக காய்க்கும். புதினா, கோடை ஒரு பெஸ்ட் மூலிகை. இது ரொம்ப வேகமா பரவும், ஆகையால் இதை ஒரு தனி தொட்டியில் நடுவது நல்லது. நீங்கள் அடிக்கடி இலைகளைப் பறிக்கலாம், அது திரும்பவும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
36
சுரைக்காய் (Bottle Gourd)
சுரைக்காய் கொஞ்சம் அதிக இடமும், படர்ந்து போக ஒரு சப்போர்ட்டும் தேவைப்படும். இது ஒரு கொடி மாதிரி வளரும். அதனால் மொட்டை மாடி அல்லது பெரிய பால்கனிக்கு இது சரியான தேர்வாகும். கோடைக்காலத்தில் இந்த காய்கறியை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. இது ரொம்ப ஆரோக்கியமான ஒரு காய்கறியாகும்.
நல்ல வெயிலும், தினமும் தண்ணீரும் கிடைத்தால் போதும் இந்த செடி வேகமாக வளர்ந்து சீக்கிரமே காய் கொடுக்க ஆரம்பிக்கும். அதேபோல் பாலக்கீரை வேகமாக வளரக்கூடிய, அதிக பராமரிப்பு தேவைப்படாத ஒரு கீரை வகையாகும். நீங்கள் சில இலைகளைப் பறித்தாலும், செடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். சின்ன தொட்டிகளில் கூட இது நன்றாக வளரும்.
56
கொத்தமல்லி (Coriander) / வெந்தயக்கீரை (Fenugreek)
கொத்தமல்லி சீக்கிரமாக வளர்ந்துவிடும். ஆனால் ஒன்று இரண்டு முறை பறித்த பிறகு அப்புறம் செடி காய்ந்துவிடும். அதனால் சில வாரங்களுக்கு ஒருமுறை புதிதாக விதைக்கிறது நல்லது. இதோடு விதைகளைக்கூட அப்புறம் சமையலுக்குப் பயன்படுத்திகொள்ளலாம். வெந்தயக்கீரை ரொம்ப சீக்கிரமாக ரெடியாகிவிடும். இதை வளர்ப்பது ரொம்ப ஈஸி. சில வாரங்களில் நீங்கள் அறுவடை செய்து கொள்ளலாம். சின்ன தொட்டிகளுக்கு இது ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ்.
66
பச்சை மிளகாய் (Green Chilli) / வெண்டைக்காய் (Ladyfinger/Okra)
பச்சை மிளகாய் செடி அதிக இடம் எடுத்துக்கொள்ளாது. ஆனால் நீண்ட காலத்துக்கு காய் கொடுக்கும். லேசான பராமரிப்பும், வெயிலும் இருந்தால் போதும், ஈஸியா வளர்ந்துடும். நம்ம தினசரி சமையல் தேவைகளை இதுவே பூர்த்தி செய்துவிடும். அதேமாதிரி, வெண்டைக்காய்க்கு வெயில் ரொம்ப பிடிக்கும். உங்கள் பால்கனியில நல்ல வெயில் அடித்தால் இந்த செடி வேகமாக வளரும். நீங்கள் reguler-ஆ வெண்டைக்காயைப் பறித்து கொண்டே இருந்தால் இன்னும் வேகமாக காய்கள் உருவாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.