
கோடை வெப்பத்திலிருந்து நம்மை தணிக்க தற்போது மழைக்காலம் வந்துவிட்டது. ஆங்காங்கே பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மழைக்காலம் வந்தாலே கூடவே பலவிதமான நோய் தொற்றுகள், பூச்சிக்கள் மற்றும் கொசு தொல்லைகள் அதிகமாகவே இருக்கும்.
அதுவும் குறிப்பாக, மழைக்காலத்தில் கொசுக்கள் இடமிருந்து தப்பிப்பது ஒரு சவாலான விஷயம் என்று சொல்லலாம். மேலும் கொசுக்கள் பொதுவாக தண்ணீர் தேங்கி இருக்கும் இடம் குப்பைகள் அதிகம் குவிந்து இருக்கும் இடங்களில் தான் அதிகமாக காணப்படும். எனவே, கொசு தொல்லையில் இருந்து தப்பிக்க எவ்வளவுதான் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட அவற்றின் கடியிலிருந்து தப்பவே முடியாது.
அதுபோல, மழைக்காலத்தில் கொசுக்களின் தொல்லை ரொம்பவே அதிகமாக இருப்பதால் டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான நோய்கள் பரவும். இதனால் உயிர் கூட போகும். எனவே இவற்றில் இருந்து தப்பிக்கவும், மழைக்காலத்தில் கொசுக்களிடமிருந்து நம்மை நாம் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம்.
அந்த வகையில், கொசுக்கடியில் இருந்து தப்பிக்க நம்முடைய வீடுகளில் இரசாயனம் கலந்த கொசு விரட்டியை பயன்படுத்துவோம். ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு கேடு. ஆகவே முடிந்தவரை இயற்கை முறையில் அவற்றை விரட்டுவது தான் நல்லது. ஆனால் அது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லையா? எனவே மழைக்காலத்தில் வீட்டில் இருக்கும் கொசுக்களை இயற்கை முறையில் விரட்டியடிக்க சில வழிகள் இங்கே உள்ளன அவை.
இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட சில டிப்ஸ்:
1. சாம்பிராணி & கற்பூரம்
மழைக்காலத்தில் காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் சாம்பிராணியுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்து அதன் புகையை வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள். இந்தப் புகையிலிருந்து வரும் வாசனையால் கொசுக்கள் விரட்டி அடிக்கப்படும் மற்றும் வீடு முழுவதும் நறுமணம் வீச தொடங்கும். வெறும் சாம்பிராணி புகைக்கு கூட கொசுக்கள் வராது.
2. யூகலிப்ட்ஸ் இலை
கொசுக்களை விரட்டியடிக்க யூகலிப்ட்ஸ் இலை உதவுகிறது. எப்படியெனில், யூகலிப்ட்ஸ் இலைகளை நன்கு உலர்த்தி, அவற்றை பற்ற வைத்து அதன் புகையை வீடு முழுவதும் பரவ செய்யுங்கள். இப்படி செய்வதினால் வீட்டில் இனி கொசுக்கள் தொல்லை இருக்காது.
3. எலுமிச்சை & கிராம்பு
எலுமிச்சையை பாதியாக நறுக்கி அதில் கிராம்புகளை நட்டு வைத்து வீட்டில் ஆங்காங்கே வைத்தால், அதிலிருந்து வரும் கடுமையான வாசனையால் கொசுக்கள் வீட்டில் இருந்து ஓடிவிடும்.
4. மாட்டு சாணம்
மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலம் அவற்றிலிருந்து வரும் புகையால் கொசுக்கள் மட்டும் இன்றி பூச்சிகள் ஈக்கள் கூட வீட்டிற்குள் வராது. இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட இது ஒரு சிறந்து தீர்வு என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: மழை வரப்போகுது.. லெதர் ஷூக்களை பராமரிக்க சூப்பரான டிப்ஸ்!
5. கற்பூரம்
கற்பூரத்தை எரித்து அதன் புகையை வீடு முழுவதும் படரச் செய்யுங்கள். அதுபோல கற்பூரத்தை ஒரு கிளாஸ் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி வைத்தால் அதன் நறுமணத்திற்கு கொசுக்கள் வீட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படும். வேண்டுமானால் நீங்கள் கற்பூரத்தை தூளாக்கி அதை வீட்டில் ஆங்காங்கே போட்டு வைத்தால் கூட கொசுக்கள் வீட்டிற்குள் வராது.
முக்கிய குறிப்பு: சுவாச கோளாறு மற்றும் ஆஸ்தும பிரச்சனை உள்ளவர்கள் வீட்டில் புகை போடுவதை தவிர்ப்பது நல்லது.
இதையும் படிங்க: என்ன மழைநீர் பார்வையை பாதிக்குமா? கண்களை பாதுகாக்க 'இத' கட்டாயம் பண்ணுங்க..!