Monsoon Kitchen Tips In Tamil
தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டது. பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்கிறது. இந்த குளிர்ந்த கால நிலையானது வெப்பத்திலிருந்து நம்மை தணிக்கிறது. இருந்தாலும் மழைக்காலத்தில் வீட்டை பராமரிப்பதில் பல சிக்கல்கள் மற்றும் சவால்கள் உண்டு.
அதுவும் குறிப்பாக மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக சமையலறையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலாக்கள் மோசமாக பாதிக்கப்படும். அதாவது, மழைக்காலத்தில் சர்க்கரை மற்றும் மசாலாக்களில் ஈரப்பதத்தால் கட்டிகள் விழுந்து விடும். இதனால் அவை சில சமயங்களில் அவற்றின் தரம் மற்றும் ஆயுள் குறைந்து கெட்டு போய்விடும்.
Monsoon Kitchen Tips In Tamil
ஆனால், சில முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அவற்றில் ஈரப்பதம் ஏற்படுவதை சுலபமாக தடுத்து, நீண்ட நாள் பயன்படுத்த முடியும். எனவே இன்றைய பதிவில் மழைக்காலத்தில் சர்க்கரை மற்றும் மசாலாக்களில் ஈரப்பதம் ஏற்படாமல் தடுக்க சுலபமான வழிகள் என்னென்ன என்பதை பற்றி விரைவாக பார்க்கலாம்.
மழைக்காலத்தில் மசாலாக்கள் கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்:
1. காற்று புகாத கொள்கலன்கள்
மழைக்காலத்தில் மசாலாக்களை சேமிக்க தரமான கொள்கலன்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம். எனவே காற்று புகாத கண்ணாடி கொள்கலன்களை பயன்படுத்துங்கள். கண்ணாடி கொள்கலன்கள் வினை திறன் இல்லாதவை என்பதால் இவை ஈரத்தை தடுக்க உதவுகிறது. கண்ணாடி ஜாடியில் மசாலாக்கள் மற்றும் சர்க்கரையை சேமித்தால் அவை எப்போதும் பிரெஷ் ஆகவே இருக்கும். நீண்ட நாள் கூட பயன்படுத்தலாம்.
Monsoon Kitchen Tips In Tamil
2. ஈரமான இடத்தில் வைக்காதே!
மழைக்காலத்தில் சமையலறையில் இருக்கும் மசலாக்கள் மற்றும் சர்க்கரையை ஒருபோதும் ஈரமான இடத்தில் வைக்க வேண்டாம். அதாவது மழைக்காலத்தில் ஜன்னல்கள், சிங்க், அடுப்பு போன்ற இடங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த இடங்களில் மசலாக்களை வைக்க வேண்டாம். மேலும் சமையல் அறையில் சூரிய ஒளி படும் இடத்தில் வைப்பது தவிர்க்கவும். அதற்கு பதிலாக, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்கலாம். இதனால் மசாலாக்கள் பிரெஷ் ஆக இருக்கும்.
3. சின்னதாக பயன்படுத்துங்கள்
மழைக்காலத்தில் பெரிய அளவில் மசாலாக்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக சிறிய அளவில் வாங்கி பயன்படுத்துங்கள். சிறிய அளவில் உள்ள மசாலா பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்த போது ஈரப்பதம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கலாம்.
இதையும் படிங்க: புதுசா சமைப்பவரா நீங்கள்? கிட்சன்ல கட்டாயம் இருக்க வேண்டிய பொருள்கள் லிஸ்ட் இதோ!
Monsoon Kitchen Tips In Tamil
4. ஸ்பூன்கள் பயன்படுத்துங்கள்
மழைக்காலத்தில் மசாலாக்களில் ஈரப்பதத்தை தடுக்க ஒவ்வொரு மசாலா பொருட்களுக்கும் ஸ்பூன் பயன்படுத்துங்கள். இதனால் ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் கலப்பது தடுக்கப்படுகிறது. முக்கியமாக நீங்கள் மசாலாக்கள் மற்றும் சர்க்கரையை பயன்படுத்தும் போது உங்களது கைகள் உலர்ந்ததாக இருக்க வேண்டும்.
5. அவ்வப்போது பரிசோதிக்கவும்
மழைக்காலத்தில் சர்க்கரை மற்றும் அசலா பொருட்களின் உயர பதம் தங்குவதையும் விரைவாக கெட்டுப் போவதையும் தடுக்க அவ்வப்போது நீங்கள் அவற்றை பரிசோதிக்க வேண்டும். ஒருவேளை மசாலாக்களில் கட்டிகள் வந்தாலோ அல்லது அவற்றின் வாசனை வேறுவிதமாக இருந்தாலோ கண்டிப்பாக அவற்றில் ஈரப்பதம் இருக்கிறது என்று அர்த்தம்.
இதையும் படிங்க: Health Tips : தப்பி தவறி கூட இந்த மசாலாக்களை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க..!