மழைக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுக்க டிப்ஸ்:
1. மழை காலத்தில் நீங்கள் வெளியில் சென்று வந்தால் உடனே சூடால நீரில் குளிக்க வேண்டும். இதனால் ஈரப்பதத்தால் வளரும் பூஞ்சைகளின் வளர்ச்சி தடுக்கப்படும்.
2. மழை காலத்தில் ஈரமான ஆடைகளை நீண்ட நேரம் அணிய வேண்டாம். ஏனெனில் ஈரமான ஆடைகள் சரும பிரச்சனைகளை மேலும் மோசமாக்கும்.
3. மழை காலத்தில் சருமத்தில் அலர்ஜி,, கொப்புளங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க, சரும ஆரோக்கியம் மேம்பட, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகளை தினமும் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. மழைக்காலத்தில் வெளியில் செல்லும்போதெல்லாம் உங்களது கையில் எப்போதும் குடை வைத்துக் கொள்ளுங்கள்.