இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும்...ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல், வீட்டிலேயே விம் லிக்விட் தயார் செய்யலாம்.!

First Published Oct 10, 2022, 11:01 AM IST

How to make vim gel at home: பாத்திரம் தேய்க்கும் 1 லிட்டர் அளவு இந்த விம் லிக்விடை, வீட்டிலேயே மிக மிக சுலபமான முறையில் நாமே தயார் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய வீடுகளில் வழக்கமாக செய்யும், செயல்களில் ஒன்று பாத்திரம் துலக்குவது. நம்முடைய முன்னோர்கள் காலத்தில் எல்லாம்,அடுப்பு சாம்பல், கொண்டு பாத்திரம் துலக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இன்றும் பல்வேறு கிராமப்புறங்களில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இன்றைய நவீன காலத்தில் யாரும் விறகடுப்பு பயன்படுத்துவதே இல்லை. மாற்றாக பல்வேறு முறைகளில் கேஸ் சிலிண்டர்கள், கரண்டு அடுப்பு போன்ற பல்வேறு அடுப்புகள் பயன்பாட்டில் வந்து விட்டது.

vessels

அதனால், நம்முடைய எல்லோரின் வீட்டிலும், பாத்திரம் துலக்க வித விதமான சோப்பு, லிக்விட் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி, நாம் கடைகளில் அதிக காசு கொடுத்து வாங்கும் விம் லிக்விட் குறுகிய நாட்களிலே காலியாகி விடுகிறது.

அப்படி இல்லாமல், பாத்திரம் தேய்க்கும் 1 லிட்டர் அளவு  இந்த விம் லிக்விடை, வீட்டிலேயே மிக மிக சுலபமான முறையில் நாமே தயார் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

மேலும் படிக்க..துணிகளில் படிந்த கறையை போக்க...இப்படி ஒருமுறை, இந்த லிக்விட் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!

எலுமிச்சை நறுமணம் கொண்ட விம் லிக்விட் டிஷ்வாஷர் ஆகும். இது பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை மிக எளிதாக நீக்குகிறது. இந்த டிஷ்வாஷ் லிக்விட் பயனர்களால் நன்கு விரும்பப்படுகிறது.

இது பாத்திரங்களில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் அழுக்குகளை எளிதில் நீக்குகிறது. 

செய்முறை விளக்கம்:

ஒரு அகலமான பாத்திரத்தில் சோடியம் கெமிக்கலை எடுத்துக் கொண்டு அதனுடன் , லெமன் எசன்ஸ் மற்றும் ஃபுட் கலர் சேர்க்க வேண்டும். இதை சேர்த்தவுடன் உப்பையும் சேர்த்து கலக்க வேண்டும். இதனை நன்றாக கலக்கினால் நமக்கு தேவையான லிக்விட் கிடைத்துவிடும்.

இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும் ஒரு லிட்டர் அளவில் கூட பாத்திரம் தேய்க்கும் லிக்விடை தயாரிக்கலாம்.

மேலும் படிக்க..துணிகளில் படிந்த கறையை போக்க...இப்படி ஒருமுறை, இந்த லிக்விட் பயன்படுத்தி பாருங்கள்..! நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!

click me!