Suriyan peyarchi 2022 Palangal: இன்று கன்னி ராசியில் நிகழும் சூரியன் பெயர்ச்சியால், குறிப்பிட்ட ராசிகளுக்கு மித மிஞ்சிய பண வரவு இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சூரிய கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார்.ஜோதிட சாஸ்திரப்படி மரியாதை, வெற்றி, முன்னேற்றம் மற்றும் அரசு ஆகியவற்றின் காரக கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளை பாதிக்கும். இன்று அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் சரியான 9 மணியளவில் பிரவேசிக்க உள்ளார். இந்த ராசி மாற்றத்தால் பல ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. இந்த ராசி மாற்றத்தால் குறிப்பிட்ட ராசிகளின் தலைவிதி மாறப்போகிறது, அவை எந்த ராசிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் கன்னி ராசியில் பெயர்ச்சி நல்ல பலன்களை தரும். மேஷ ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வேலையில் உற்சாகம் இருக்கும். வேலையில் கவனத்துடன் செயல்பட்டால், வருமானம், வெற்றி ஆகியவை வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப பிரச்சனைகளும் தீரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சில நல்ல செய்திகள் கிடைக்கும்.வாழ்வில் அனுகூலம் கிடைக்கும்.
கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வெற்றிகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் தாயின் ஆதரவு கிடைக்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்துடன் ஆன்மீக வழிபாட்டு தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
45
Suriyan peyarchi 2022 Palangal:
விருச்சிகம்
சூரியனின் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் உண்டு. சூரியனின் சஞ்சாரத்தால் எங்காவது சிக்கிய பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதனுடன், புதிய வருமான ஆதாரங்களும் தொடங்கும். இந்தக் காலக்கட்டத்தில் சொத்து தொடர்பான வேலையில் லாபகரமாக இருக்கும்.
55
Suriyan peyarchi 2022 Palangal:
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரவேசிக்கும். ஏதேனும் ஒரு சொத்தில் முதலீடு செய்தால், அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். பழைய நீதிமன்ற வழக்குகளில் நிம்மதி கிடைக்கும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எதிரபாராத வகையில் செல்வம் பெருகும்.