Baby Lotions: சொன்னா நம்பமாட்டீங்க! குழந்தைகளின் ஹார்மோன்களை பாதிக்கும் லோஷன்! வெளியான பகீர் தகவல்!

First Published | Sep 11, 2024, 9:53 AM IST

Baby Lotions: குழந்தைகளுக்கான லோஷன்கள், கிரீம்கள் போன்ற அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

baby Lotion

அழகு சாதன பொருட்கள் என்ற பெயரில் குழந்தைகளுக்கு லோஷன்கள், கிரீம்கள் போன்ற கண்ட கண்ட பொருட்கள் விளம்பரம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதை ஏழை மக்கள் முதல் பணக்காரர்கள் வரை குழந்தைகளுக்கு வாங்கி உபயோகித்து வருகின்றனர். குழந்தைகளுக்கு உபயோகிக்கப்படும் அழகு சாதன பொருட்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. 

Hormonal Disruptions

இந்நிலையில் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக பொது சுகாதாரக் கல்லூரியின் ஆய்வில் லோஷன்கள், முடி எண்ணெய்கள், ஹேர் கண்டிஷனர்கள், கிரீம்கள் மற்றும் சன்ஸ்கிரீன்கள் போன்ற அழகு சாதன பொருட்களின் பயன்பாடு குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குறிப்பிட்ட பொருட்களால், குழந்தைகளின் உடலில் தாலேட்ஸ் எனப்படும் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் ரசாயனங்களின் அதிக அளவில் கலப்பது
வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

Tap to resize

Skin-care products

குழந்தைகளின் இனம் மற்றும் இனத்தின் பூர்வீகம் சார்ந்து இந்த ரசாயனங்களின் வெவ்வேறு அளவுகள்அவற்றின் நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் குணங்களுக்கு பெயர் பெற்றவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கின் நெகிழ்வுத்தன்மை மற்றும் நீடித்த தன்மையை மேம்படுத்த தாலேட்ஸ் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. அவை பல அழகுசாதன பொருட்களிலும் காணப்படுவது தெரியவந்துள்ளது. இந்த ரசாயனங்கள் உடலின் இயற்கையான ஹார்மோன்களைப் தடுக்கின்றன. குழந்தைகளின் முக்கியமான வளர்ச்சிக் கட்டங்களில் உடலின் ஹார்மோன்கள் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். 

George Mason University College of Public Health

ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார கல்லூரியில் உலகளாவிய மற்றும் சமூக ஆரோக்கியம் பேராசிரியராக உள்ள, மைக்கேல் எஸ் ப்ளூம் என்பவர் தான் இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளராக இருந்துள்ளார். மருத்துவ பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை உட்பட அமெரிக்கா முழுவதும் உள்ள 10 வெவ்வேறு தளங்களில் இருந்து 4 முதல் 8 வயது வரையிலான 630 குழந்தைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலானது. 

Latest Videos

click me!