ரயிலில் பெண்கள் டிக்கெட் இல்லாமலே பயணிக்கலாம்! பெண்கள் பாதுகாப்புக்காக சட்டங்கள்!!

Published : Mar 05, 2025, 04:56 PM IST

Women Safety Laws On Train : ரயிலில் பெண்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை என்னென்ன என்பதை எங்கு காணலாம்.

PREV
16
ரயிலில் பெண்கள் டிக்கெட் இல்லாமலே பயணிக்கலாம்! பெண்கள் பாதுகாப்புக்காக சட்டங்கள்!!
ரயிலில் பெண்கள் டிக்கெட் இல்லாமலே பயணிக்கலாம்! பெண்கள் பாதுகாப்புக்காக சட்டங்கள்!!

ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். அவர்களில் பெண்களும் உண்டு. ஆதலால் தான் ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்வே துறை புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் இந்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு என்னென்ன சட்டங்கள் பொருந்தும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

26
இந்திய ரயில்வே சட்டம்

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1981 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 139 அமலில் உள்ளது. இந்த ஆண்டில் இயற்றப்பட்ட சட்டங்கள் ரயில்களில் தனியாக பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

இதையும் படிங்க:  ஹோலி பண்டிகை! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மதுரை தெற்கு ரயில்வே!

36
ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கான சட்டங்கள்

1. இந்திய ரயில்வே துறை சட்டத்தின் படி ஒரு பெண் டிக்கட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணை ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடக்கூடாது. அதற்கு பதிலாக அவள் அபராதத்தை செலுத்தி விட்டு தனது பயணத்தை தொடரலாம். ஒருவேளை அந்த பெண் அபராதம் செலுத்த பணம் இல்லை என்று சொல்லினாலும் கூட டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணை ரயிலில் இருந்து ஒருபோதும் இறக்கிவிடவே கூடாது.

இதையும் படிங்க:  ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி.? முழுமையான ரயில் விதிகள் இதோ.!

46
ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கான சட்டங்கள்

2. ஒருவேளை பெண்ணை ரயிலிலிருந்து இறக்கி விட வேண்டுமென்றால் அங்கே ஒரு பெண் போலீஸ் அதிகாரி கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுபோல, பிரிவு 162- ன் படி, 12 வயதிற்குட்பட்ட ஆண் பிள்ளை தன் தாயுடன் பெண்கள் வகுப்பில் பயணிக்க அனுமதி உள்ளது. அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் பிள்ளை பெண்கள் பயணிக்கும் வகுப்பில் அனுமதி இல்லை மீறி உள்ளே நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

56
ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கான சட்டங்கள்

3. இந்திய ரயில்வே சட்டம் 1989ன்  பிரிவு 311 இன் படி இராணுவ வீரர்கள் ஒருபோதும் பெண்கள் பயணிக்கும் வகுப்பில் நுழைய அனுமதி கிடையாது. அதுபோல நீண்ட தூர பயணத்தில் ஸ்லீப்பர் வகுப்பில் 6 இருக்கைகள் பெண்களுக்கு கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும். மேலும் ஏசி மூன்றாம் வகுப்பில் ஆறு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். பெண்களின் வயதை பொறுப்பெடுத்தாமல் இந்த சீட் முன்பதிவு செய்யப்பட வேண்டும்.

 

66
ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கான சட்டங்கள்

4. முக்கியமாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். ரயிலில் பெண்களை யாராவது துன்புறுத்தினால், உடனே புகார் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதற்காக நீங்கள் டிக்கெட் ஆய்வாளர் அல்லது காவல்துறை அதிகாரிக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இந்திய ரயில்வே பக்கம் மற்றும் ரயில்வே அமைச்சரின் கணக்கை சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு கூட புகார் செய்யலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories