Laundry Tips: டாப் லோடிங் வாஷிங் மெஷினில் துணிகளை சரியாக லோட் செய்வது எப்படி? அதிகமாக நிரப்புதல் உள்ளிட்ட பொதுவான தவறுகளை தவிர்த்து மெஷினை பாதுகாக்கலாம்.
துணி துவைப்பது சுலபமான வேலைதான். ஆனால் டாப்-லோடிங் மெஷினில் நாம் செய்யும் சில தவறுகளால் மெஷின் சீக்கிரம் பழுதாகலாம் அல்லது துணிகள் சரியாக சுத்தமாகாமல் போகலாம் என்கிறார் சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஆண்ட்ரே சுப்ருனோவ். தவறான முறையில் துணிகளைத் திணித்தால், மெஷினின் ஷாக் அப்சார்பர்கள், சஸ்பென்ஷன் மற்றும் டிரம் பேரிங்குகள் தேய்ந்துவிடும். உங்கள் மெஷின் நீண்ட காலம் உழைக்கவும், துணிகள் பளிச்சென்று இருக்கவும் இதோ சில டிப்ஸ்.
28
அதிக டிடர்ஜென்ட் பயன்படுத்தினால் பிரயோஜனம் இல்லை
சுப்ருனோவ் கூற்றுப்படி, நிறைய டிடர்ஜென்ட் போட்டால் துணி நன்றாக சுத்தமாகும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது எதிர்மறையான விளைவையே தரும். துணிகள் சரியாக சுத்தமாகாது, சோப்பின் மிச்சம் துணியிலேயே தங்கிவிடும். அதிகப்படியான டிடர்ஜென்ட், டிரம்மின் அடிப்பகுதியில் படிந்து, துவைக்கும்போது இன்னும் அதிக நுரையை உருவாக்கும்.
38
முதலில் டிடர்ஜென்ட் போடுங்கள்
பல டாப்-லோடிங் மெஷின்களில் சோப்பு கரைய தனியாக சோப் டிஸ்பென்சர் இருக்கும். அப்படி ஒருவேளை டிஸ்பென்சர் இல்லை என்றால், துணிகளைப் போடுவதற்கு முன்பு டிடர்ஜென்ட்டை டிரம்மின் அடிப்பகுதியில் நேரடியாகப் போடலாம். இது சோப்பு தண்ணீரில் எளிதாகக் கரைய உதவும்.
48
மெஷினில் மிகவும் குறைவாக நிரப்ப வேண்டாம்
சில சமயம், அவசரமாக ஒன்று அல்லது இரண்டு துணிகளை மட்டும் துவைக்க வேண்டியிருக்கும். ஆனால் இது வாஷரின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்கிறார் நிபுணர் மேத்யூ மோரிசன். துணிகள் மிகவும் குறைவாக இருந்தால், மெஷின் சமநிலையற்றதாக (out-of-balance) மாறும். இதனால், சமநிலையைச் சரிசெய்ய மெஷின் மீண்டும் மீண்டும் தண்ணீரை நிரப்பி, துவைக்கும் நேரத்தை அதிகரிக்கும்.
58
அதிகம் தண்ணீர் உறிஞ்சும் துணிகள்
அதிகமாகத் தண்ணீர் உறிஞ்சும் அல்லது கனமான துணிகளும் மெஷினின் சமநிலையைக் குலைக்கலாம். ஈரமாகும்போது இந்தத் துணிகள் மிகவும் கனமாகிவிடும். அந்த எடை ஒரே பக்கமாகச் சேர்ந்தால், வாஷர் பயங்கரமாக சத்தம் போடலாம், அதிரலாம் அல்லது சமநிலைக்காக அடிக்கடி நிற்கலாம். இதுபோன்ற சமயங்களில், அதே வெப்பநிலையில் துவைக்கக்கூடிய சில சிறிய துணிகளைச் சேர்த்துப் போட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், சமநிலைக்காக ஒரு கனமான பாத் மேட்டுடன் மிகவும் மென்மையான (delicate) துணியைப் போடாதீர்கள்.
68
இயந்திரத்தை அதிகமாக நிரப்ப வேண்டாம்
வாஷருக்குள் துணிகளை அழுத்தித் திணிக்காதீர்கள். உங்கள் மெஷினில் நீளமான அஜிடேட்டர் (Agitator - நடுவில் இருக்கும் தண்டு) உள்ளதா அல்லது கீழே சுழலும் வாஷ் பிளேட் உள்ளதா என்பதைப் பொறுத்து, துணி போடும் முறை மாறுபடும்.
78
பாரம்பரிய அஜிடேட்டர் உள்ள மெஷின்
துணிகளைத் தளர்வாகவும் சமமாகவும் நடுவில் உள்ள தண்டைச் சுற்றிப் போடுங்கள். டிரம்மில் 2/3 பங்குக்கு மட்டுமே துணிகளை நிரப்புங்கள். அஜிடேட்டர், துணிகளை நடுவிலிருந்து கீழே இழுத்து, ஓரங்களில் மேலே தள்ளி வேலை செய்யும். துணிகளை இறுக்கமாகத் திணித்தால், அஜிடேட்டரால் சரியாக வேலை செய்ய முடியாது, துணியும் சுத்தமாகாது.
முக்கிய குறிப்பு: பெட்ஷீட்கள் அல்லது பேன்ட்களை நடு தண்டுடன் சுற்ற வேண்டாம், அவை சிக்கிக்கொள்ளலாம். வாஷ் பிளேட் உள்ள
மெஷின்: முதலில் பெரிய துணிகளைப் போட்டு, பின்னர் நடுத்தர மற்றும் சிறிய துணிகளை நிரப்பவும். இதிலும் 2/3 பங்குக்கு மேல் நிரப்ப வேண்டாம். இரண்டு வகை மெஷின்களிலும், சாக்ஸ் போன்ற சிறிய துணிகள் டிரம்மின் இடுக்குகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. "இதனால்தான் நம்மில் பலருக்கு ஒரு சாக்ஸ் தொலைந்து போகிறது" என்று சுப்ருனோவ் வேடிக்கையாகக் கூறுகிறார்.
88
நீண்ட காலம் உழைக்கும்
வாஷரை சரியாக லோட் செய்வது ஒரு சிக்கலான விஷயம் இல்லை என்றாலும், அதை கவனமாகச் செய்ய வேண்டும். சரியாக லோட் செய்தால், வாஷர் துணிகளை நன்றாக சுத்தம் செய்யும், சத்தம் குறைவாக வரும், நீண்ட காலத்திற்கு உழைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.