Suriyan Peyarchi 2022 Palangal: கன்னி ராசியில் அடுத்த 24 மணி நேரத்தில், சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் லாபமும் உண்டாகும்.
ஜோதிடத்தின் பார்வையில், நவ கிரங்களில் சூரியன் முக்கியமான கிரகமாக உள்ளது. சூரியன் பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும். அதன்படி, இன்னும் 24 மணி நேரத்தில் அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியை விட்டு விலகி கன்னி ராசியில் பிரவேசிக்கப் போகிறார். அந்த வகையில் சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பாக இருக்கும்.
எனினும், இந்த குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆதாயங்களும் லாபமும் உண்டாகும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்களின் பணி சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். இந்த இரண்டு சூழ்நிலைகளும் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.வியாபாரிகளுக்கு இந்த நேரத்தில் புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.
44
Suriyan Peyarchi 2022:
விருச்சிகம்:
கன்னி ராசியில் சூரியனின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு 11ஆம் வீட்டில் நடக்கும். இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது திடீர் பண ஆதாயத்தையும் நாம் பெறலாம். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் நன்றாக அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.