ஜோதிடத்தின் படி, குருவின் சுப பார்வையால் பல்வேறு ராசிக்காரர்களும் பலன் அடைகிறார்கள். ஏனெனில், வியாழன் கிரகம் அறிவுத்திறன், வளர்ச்சி, செல்வம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றின் காரணியாக இருக்கிறார். அதன்படி, இன்னும் இரண்டு நாட்களில்குரு பகவான் பிற்போக்காக நகர்வார். ஆம், ஜூலை 29 ஆம் தேதி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் அதன் சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில் நுழைகிறார். பிற்போக்கு இயக்கமும், நேரடி இயக்கமும் கிரகங்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இவை பல்வேறு ராசிகளில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். வியாழன் ஏப்ரல் மாதம் மீன ராசியில் நுழைந்தார். இப்போது அவர் அதே ராசியில் வக்ரமாவார். குருவின் சுப பார்வையால் பல்வேறு ராசிக்காரர்களும் பலன் அடைகிறார்கள். அதன்படி, எந்தெந்த ராசிகளுக்கு குருவின் அதிர்ஷ்டம் அதிகம் இருக்கும், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.