Kitchen Tips: இனி கேஸ் செலவு அப்படியே மிச்சம்.! சாப்பாடும் 1 நிமிடத்தில் ரெடியாகும்.! சீக்ரெட் இதுதான்.!

Published : Apr 07, 2026, 01:21 PM IST

கேஸ் தட்டுப்பாடு, விலை உயர்வுனு பல பிரச்சனைகள். இதற்கு மாற்று வழியாக நிறைய பேர் இன்டக்‌ஷன் ஸ்டவ் வாங்குகிறார்கள். ஆனால், அதைவிட ஒரு சிறந்த ஆப்ஷன் இருக்கிறது. அதற்குப் புதிதாக பாத்திரங்கள் கூட வாங்கத் தேவையில்லை. அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
14
இன்டக்‌ஷனுக்கு மாற்று
கேஸ் தீர்ந்துவிடும் என்ற பயம் இல்லாமல், குறைந்த செலவில் சமைக்க எலக்ட்ரிக் ஸ்டவ்கள் ஒரு வரம். ஆனால், நம் வீட்டில் இருக்கும் பழைய பாத்திரங்கள் இன்டக்‌ஷன் ஸ்டவ்வில் வேலை செய்யாது. இந்தப் பிரச்சனைக்கு சரியான தீர்வுதான் இன்ஃப்ராரெட் ஸ்டவ். இன்டக்‌ஷனை விட இது ஏன் சிறந்தது என்று இங்கே பார்க்கலாம்.
24
இன்டக்‌ஷன் ஸ்டவ் சிக்கல்கள்
நீங்கள் இன்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கும்போது, அதற்கேற்ற புதிய பாத்திரங்களையும் வாங்க வேண்டும். இது தட்டையான அடிப்பாகம் (Flat base) கொண்ட ஸ்டீல் அல்லது இரும்பு பாத்திரங்களில் மட்டுமே வேலை செய்யும். நம் வீட்டில் இருக்கும் அலுமினியம், செம்பு, நான்-ஸ்டிக் பாத்திரங்கள், ஏன் மண்பானையைக் கூட இதில் பயன்படுத்த முடியாது. இதனால் நமக்குக் கூடுதல் செலவுதான் ஏற்படும்.
34
இன்ஃப்ராரெட் ஸ்டவ்வின் நன்மைகள்
பார்க்க இன்டக்‌ஷன் ஸ்டவ் போலவே இருந்தாலும், இதில் உள்ள காயில் முழுவதும் சூடாகும். அதனால் எந்தப் பாத்திரத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பழைய அலுமினியப் பாத்திரம், பிரஷர் குக்கர், இரும்பு வாணலி, தோசைக்கல், ஏன் மண்பானையைக்கூட இதில் வைத்துச் சமைக்கலாம். புதிதாக ஒரு பாத்திரம்கூட வாங்கத் தேவையில்லை. ஆனால், இன்டக்‌ஷனை விட கரண்ட் பில் கொஞ்சம் அதிகமாக வரலாம். இருந்தாலும், கேஸ் தீர்ந்துபோகும்போது வரும் டென்ஷனை விட, பிளக் போட்டதும் சமைப்பது மிகவும் வசதியானது.
44
புதிய பாத்திரங்கள் தேவையில்லை, பணம் மிச்சம்
கேஸ் பில்லைக் குறைக்க நினைக்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்த இன்ஃப்ராரெட் ஸ்டவ் ஒரு சூப்பர் சாய்ஸ். இதற்கென்று புதிதாகப் பாத்திரம் வாங்க வேண்டாம். பேச்சுலர்ஸ், சிறிய குடும்பங்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். சமையல் வேலையும் சீக்கிரம் முடியும், பணமும் மிச்சமாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories