கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் மட்டுமின்று விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்கை வரலாறு படமான 'மகாநடி' படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றவர். இந்த திரைபடம் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.