இதை 'ஜப்பானிய இன்டர்வல் வாக்கிங்' (IWT) என்று அழைப்பார்கள். ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நடைப்பயிற்சி முறையில், சீரான இடைவெளியில் வெவ்வேறு வேகத்தில் நடக்க வேண்டும். தினமும் 30 நிமிடம் செய்ய வேண்டிய இம்முறையில், மூன்று நிமிடங்கள் மெதுவாகவும், அடுத்த மூன்று நிமிடங்கள் வேகமாகவும் மாற்றி மாற்றி நடக்க வேண்டும்.
எது சிறந்தது?
நிபுணர்கள் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையையே அதிகம் ஆதரிக்கின்றனர். "வழக்கமாக நடக்கும் 10,000 படிகளை விட, அதிக நன்மைகளைத் தரக்கூடிய இந்த முறையை ஜப்பானியர்கள் கண்டறிந்துள்ளனர். தினமும் 30 நிமிடம் இதைச் செய்து பாருங்கள், இதன் முடிவு உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும்" என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வழக்கமான 10,000 படிகளை விட இந்த IWT முறை இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது, மனநிலையை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முறை இதய ஆரோக்கியத்தையும் உடற்தகுதியையும் பெரிய அளவில் மேம்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.