Interesting Facts: Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?

Published : Jul 18, 2026, 12:27 PM IST

Interesting Facts: நாம தினமும் பயன்படுத்துற வார்த்தைகள்ல 'Thanks'ம் ஒண்ணு. ஆனா 'Thanks', 'Thank you'னு ரெண்டுமே சொல்வோம். ரெண்டுக்கும் ஒரே அர்த்தம்னாலும், பயன்படுத்துற இடங்கள் வேற. அது என்னன்னு இப்போ பார்க்கலாம்.

PREV
15
Interesting Facts

ஒருத்தர் நமக்கு உதவி செஞ்சா நன்றி சொல்ல 'Thanks' அல்லது 'Thank you' பயன்படுத்துவோம். ஆனா, 'Thanks' என்பது நண்பர்கள், குடும்பத்தினர்னு நெருக்கமானவங்ககிட்ட பேசும்போது பயன்படுத்துற முறை (informal). 'Thank you' என்பது பெரியவங்க, வேலை பார்க்கும் இடம், தெரியாதவங்ககிட்ட மரியாதையா பேசும்போது பயன்படுத்துற முறை (formal).

இதையும் படியுங்கள் -  Lawyer vs Advocate: லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!

25
எப்போ, எதை உபயோகிக்க வேண்டும்?

நண்பர்கள் அல்லது நெருக்கமானவங்ககிட்ட பேசும்போது 'Thanks' சொல்றது இயல்பு. அது கொஞ்சம் கேஷுவலா இருக்கும். ஆனா, டீச்சர், பாஸ், வாடிக்கையாளர்கள் அல்லது பெரியவங்ககிட்ட பேசும்போது 'Thank you' சொல்றதுதான் சரி. அது அவங்களுக்கு நாம கொடுக்கிற மரியாதையை காட்டும்.

இதையும் படியுங்கள் -  Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

35
சொற்றொடர்களில் உள்ள வேறுபாடு

'Thanks' வார்த்தையை 'Thanks a lot', 'Many thanks', 'Thanks buddy' போன்ற சொற்றொடர்களில் அதிகமா பயன்படுத்துவாங்க. ஆனா 'Thank you' என்பதை 'Thank you very much', 'Thank you so much', 'Thank you for your support' போன்ற முறையான (official) உரையாடல்களில் பயன்படுத்துவாங்க.

இதையும் படியுங்கள் -  Interesting Facts: உலகத்திலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!

45
ஃபார்மல், இன்ஃபார்மல்

ஒரு நண்பருக்கு இ-மெயில் அனுப்பும்போது 'Thanks for sharing'னு எழுதினா போதும். ஆனா, ஒரு புரொஃபஷனல் மெயில்ல 'Thank you for your response'னு எழுதுறதுதான் முறை. எழுத்துலயும் 'Thanks' கேஷுவலாகவும், 'Thank you' புரொஃபஷனலாகவும் பயன்படுது.

இதையும் படியுங்கள் -  Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!

55
உணர்ச்சிப்பூர்வமான தாக்கம்
'Thanks' சொல்றது ஒரு சின்ன உதவிக்கு காட்டுற உடனடி நன்றி (quick gratitude). உதாரணமா, யாராவது கதவ திறந்துவிட்டா சொல்றது. ஆனா 'Thank you' சொல்றது, ஒருத்தர் நமக்காக அவங்க நேரத்தையும் உழைப்பையும் செலவு செஞ்சதுக்கு காட்டுற ஆழமான நன்றி (deep gratitude).

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories