டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக உள்ள, இந்தியாவின் தலை சிறந்த தொழிலதிபர்களின் ஒருவரான ரத்தன் நாவல் டாட்டா செல்ல பிராணிகள் மேல் வைத்துள்ள அளவு கடந்த பாசத்தையும் அதன் காரணமும் தெரியுமா...
அதற்க்கு முன் ரத்தன் டாடா பற்றில் தெரிந்து கொள்வோம்... மும்பையின் செல்வம் செழிப்பு மிகுந்த டாடா குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. சூனு மற்றும் நவால் ஹார்முஸ்ஜி டாடா ஆகியோரின் மூத்த மகன். ரத்தன், டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரனாவார். ரத்தனின் குழந்தைப்பருவம், நிம்மதி இல்லாதது. இவருடைய ஏழு வயதில் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அவரது இளைய சகோதரர் ஜிம்மிக்கு ஐந்து வயது தான் அப்போது. அவரது அன்னை குடும்பத்திலிருந்து வெளியேறியபின், ரத்தனையும் அவரது சகோதரரையும் அவர்களது பாட்டியார் லேடி நவஜிபாய் தான் வளர்த்தார்.
தாய் இல்லாத தனிமை, இவர்களுக்கு வந்து விட கூடாது என்பதற்காக, இவருடைய பாட்டி வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ந்தார். பள்ளிக்கு சென்று வந்த நேரம் போக, இவர் டிட்டோ என்கிற நாய்குட்டியுடன் தான் விளையாடுவார். இது இவர்களின் செல்ல பிராணி அல்ல அதற்கும் மேல் என்று கூறலாம்.
ரத்தன் டாடாவின் 14 ஆவது வயது, பிறந்தநாளின் போது டிட்டோ என்கிற அந்த நாய் இறந்து விடுகிறது. அந்த நாயின் மறைவு இவரை அதிகம் பாதித்து.
அதில் இருந்து மீண்டு, மீண்டும் நாய் குட்டிகள் மீது பாசம் செலுத்த துவங்கினார். இந்த பந்தம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
தன்னுடைய வீட்டில் பல நாய் குட்டிகளை தோழன் போல வளர்த்து வருகிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதனுடன் விளையாடுகிறார். அவர்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்.
வீட்டில் உள்ள நாய்களை கடந்து, தெருவில் உள்ள நாய்கள் மீதும் பாசம் காட்டி வருகிறார் ரத்தன் டாடா. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், பாசத்தை அள்ளி கொடுக்கும் நாய்களை யாருக்கு தான் பிடிக்காது. இதில் இவர் மட்டும் விதி விலக்கா என்ன?
தன்னுடையது நாய்களை பராமரிக்க, சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களையும் வைத்துள்ளார் ரத்தன் டாடா .