How To Wash Towels To Keep Them Soft : பழைய துண்டுகள் எல்லாம் கல் மாதிரி சொரசொரன்னு ஆகிடுச்சா? இனி கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, உங்க பழைய துண்டுகளை புதுசு போல சாஃப்டாக மாற்ற சில சூப்பர் டிப்ஸ் இதோ.
How To Wash Towels To Keep Them Soft - துண்டை சாஃப்டாக்க மாற்றும் வழிகள்
முகம் துடைக்கும் துண்டுகளை அடிக்கடி துவைப்பது, அதிகமா சோப் பவுடர் போடுவது, தப்பான முறையில் காய வைப்பதுதான் துண்டுகள் சொரசொரப்பாக மாற முக்கிய காரணம். இதனால பணமும் செலவாகும், பயன்படுத்தவும் கஷ்டமா இருக்கும். மேலும் இதுபோன்ற கடினமான துண்டுகள் சருமத்தையும் பயங்கரமா சேதப்படுத்தும். வீட்டிலேயே எளிமையா துண்டுகளை சாஃப்டாக மாற்றும் வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
25
அதிகமாக சோப்பு போடாதீர்கள்
துண்டுகள் சொரசொரப்பாக மாற முக்கிய காரணம், அதில் சோப்பு தங்கிவிடுவதுதான். துவைக்கும்போது சோப்பு முழுமையாக வெளியேறவில்லை என்றால், அது துண்டின் நூலிழைகளில் (Fibers) படிந்துவிடும். இதைத் தவிர, கடின நீர் (Hard Water) கூட துண்டுகளை சொரசொரப்பாக மாற்றும். அதிக வெயிலில் நீண்ட நேரம் காய வைப்பதாலும் துண்டின் மென்மை குறையும்.
35
வினிகரில் ஊறவையுங்கள்
பழைய துண்டுகளை மீண்டும் சாஃப்ட் ஆக்க நீங்க ரொம்ப மெனக்கெட வேண்டாம். ஒரு பக்கெட் வெதுவெதுப்பான நீரில், ஒரு கப் வெள்ளை வினிகரை (White Vinegar) கலக்குங்க. இப்போ, உங்க துண்டுகளை அதில் 30 நிமிஷம் ஊற வைங்க. பிறகு வழக்கம் போல துவைங்க. வினிகர், துண்டில் படிந்திருக்கும் சோப்பை நீக்கி, நூலிழைகளை மென்மையாக்கும். தேவைப்பட்டால், துவைக்கும்போது அரை கப் பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம்.
துண்டுகளை எப்போதுமே நல்ல காற்றோட்டமான இடத்தில் காய வைங்க. அதிக வெயிலில் காய வைப்பதை தவிர்த்திடுங்க. ஒருவேளை நீங்க டிரையர் (Dryer) பயன்படுத்தினால், அதில் சில நிமிடங்கள் மட்டும் டிரை செய்தால் போதும். இது துண்டுகளை இன்னும் மென்மையாக்கும்.
55
ஃபேப்ரிக் சாஃப்ட்னர்களை பயன்படுத்துங்கள்
துண்டு துவைக்கும்போது அதிகமா சோப் பவுடர் பயன்படுத்தாதீங்க. ஃபேப்ரிக் சாஃப்ட்னர்களை (Fabric Softeners) அதிகம் பயன்படுத்தினால், அது துண்டின் நூல்களை சேதப்படுத்தும். அவ்வப்போது துண்டுகளை சரியாகத் துவைப்பது அவசியம். அப்போதுதான் அதில் அழுக்கு சேராது. இந்த ஈஸியான டிப்ஸ் உங்க பழைய துண்டை புதுசு போல சாஃப்ட் ஆக்க நிச்சயம் உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.