பணத்தைப் பற்றிய அறிவாற்றல், சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்து, தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது, சரியான நேரத்தில் பொருத்தமான நிதி இலக்குகளை வரையறுப்பதில் உங்கள் குழந்தைக்கு உதவும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் குழந்தைகளுக்கு நேரடியாக சொல்லி கொடுக்கவில்லை என்றாலும், செலவழித்தல், சேமிப்பு, கடன் வாங்குதல் மற்றும் வரவு வைப்பது போன்ற கருத்துக்களைப் புரிந்துகொள்ள உங்களின் ஒவ்வொரு செயலையும் அவர்கள் தீவிரமாகக் கவனித்து வருகின்றனர். எனவே உங்கள் குழந்தையில் ஆரோக்கியமான பணப் பழக்கத்தை வளர்ப்பதற்கான சில வழிகள் குறித்து பார்க்கலாம்.