வெள்ளை வேஷ்டிகளில், ஆடைகளில் மஞ்சள் கறைபடுவது மோசமான நிகழ்வாகும். அந்த கறையை நீக்காமல் அந்த ஆடைகளை பயன்படுத்த முடியாது. அதே சமயம் அந்த ஆடையை தூக்கி எறியவும் முடியாது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் 1 ஸ்பூன் வெள்ளை வினிகர், 1 ஸ்பூன் பாத்திரங்களைக் கழுவும் திரவம் கலந்து கறை பட்ட துணியை அதில் 30 நிமிடங்கள் ஊற வைத்தால் பலன் கிடைக்கும். ஆனால் இது மாதிரியான முறைகளுக்கு வினிகர் தேவை. ஆனால் காசு அதிகம் செலவில்லாமல் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே இந்த கறைகளை நீக்கலாம்.
24
Remove Yellow Stain From White Clothes In Tamil
லைஃப்பாய் சோப்பில் கைகளை கழுவினால் கிருமிகளிடம் இருந்து தப்பலாம் என பல விளம்பரங்களை பார்த்திருப்போம். ஆனால் லைஃப்பாய் சோப்பு அதை தாண்டியும் உதவியாக இருக்கும். பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆடைகளில் மஞ்சள் கறை பட வாய்ப்புள்ளது. மஞ்சள் கறையை எவ்வளவு தேய்த்தாலும் கறை மட்டும் நீங்காது. ஆனால் அதிகமாக ஆடையை துவைப்பதால் கிழிந்துவிடும்.
கறைகளை போக்க அதிகமாக தேய்ப்பது பலரின் வழக்கமாக இருக்கும். ஆனால் இப்படி துவைப்பது ஆடைகளின் தன்மையை மாற்றிவிடும். பழைய ஆடைகளை போல மங்கிவிடும். அதனால் புது ஆடைகள் கூட பழசு போல காட்சியளிக்கும். ஆனால் லைஃப்பாய் சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்தால் துணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
மஞ்சள் கறை உள்ள ஆடையை தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். அதன் மீது லைஃப்பாய் சோப்பு வைத்து நன்கு தேய்த்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் வெள்ளை துணி சிவப்பு போல மாறும். அப்படி மாறுவதால் பயப்பட தேவையில்லை. அதை தண்ணீரில் அலசி காய போடுங்கள். துணி உலர்ந்த பிறகு அந்த மஞ்சள் கறை மாறிவிடும். சோப்பின் சிவப்பு நிறமும் தெரியாது. இந்த முறையில் பச்சிளம் குழந்தைகளின் மலம் பட்ட துணிகளை துவைக்கலாம். மஞ்சள் நிறம் இல்லாமல் இருக்கும்.