3. தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்க..
நீங்கள் தேங்காயை உடைத்து வைத்திருந்தால் அவை கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பயன்படுத்த விரும்பினால், தேங்காயின் உட்பகுதியில் எலுமிச்சை சாறு தடவி பிறகு அதை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்படி வைப்பதும் மூலம் தேங்காய் ஒரு வாரம் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.
இதுவே நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க விரும்பவில்லை என்றால் அதை உப்பு தண்ணீரில் போட்டு வைக்கவும். ஆனால் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
4. கிச்சன் சிங்க் சுத்தமாக இருக்க..
இதற்கு தண்ணீீரில் எலுமிச்சை சாறு, டிஷ் வாஷ் லிக்விட், சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஆர்கிய பிறகு அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள் பிறகு பாத்திரம் தேய்த்த பிறகு, இந்த தண்ணீரை சிங்கிள் தெளிக்க வேண்டும் இப்படி செய்தால் எறும்புகள், கரப்பான் பூச்சிகள் தொல்லை இருக்காது.