Cleaning Hacks: தண்ணீர் பைப் உப்புக்கறை போகணுமா? 'இந்த' ஒரு பொருள் போதும்.. அசத்தல் கிளீனிங் டிப்ஸ்!

Published : Aug 02, 2026, 07:08 AM IST

Cleaning Hacks: வீட்டின் தண்ணீர் பைப்புகளில் இருக்கும் விடாப்பிடியான உப்புக்கறையை ஒரே ஒரு சொட்டு வாஸ்லின் வைத்து சட்டென போக்கலாம். இந்த எளிய வழிமுறைகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
தண்ணீர் பைப்புகளின் உப்புக்கறைகளை போக்க சூப்பர் டிப்ஸ்

பாத்ரூம், கிச்சன் பைப்புகளில் படிந்துள்ள வெள்ளை நிற உப்புக்கறையை எவ்வளவு தேய்ச்சாலும் போகாது. ஆனால் இப்போது அதுக்கு ஒரு சிம்பிள் தீர்வு உள்ளது. பைப் மேல் வாஸ்லின் தடவி துடைத்தால் அந்த கரைகள் மாயமாக மறைந்து போகும். இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்.

இது தொடர்பாக பரவும் வைரல் வீடியோவில் தண்ணீர் கரைகள் படிஞ்சு மங்கலாக இருக்கும் ஒரு ஸ்டீல் பைப் மேல் கொஞ்சம் வாஸ்லின் தடவுறாங்க. அதன்பிறகு ஒரு காய்ந்த துணியை வைத்து லேசாக துடைச்சதும், அந்த பைப்பில் இருந்த கரைகள் எல்லாம் மாயமாகி கண்ணாடி மாதிரி பளபளன்னு மின்னுகிறது. இந்த சிம்பிள் டிரிக்கை பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுறார்கள்.

இதையும் படிங்க: Silver Cleaning: வெள்ளி மோதிரம் கறுத்துப்போச்சா? நிமிஷத்தில் புதுசு போல ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்!

24
வாஸ்லின் எப்படி வேலை செய்கிறது?

வாஸ்லின் ஒரு பெட்ரோலியம் ஜெல்லி. இதற்கு தண்ணீர எதிர்க்கிற (Water Repellent) குணம் இருக்கு. தண்ணீர் காய்ந்து உருவாகம் வெள்ளை கறைகளை இந்த ஜெல்லி அதன் பிசுபிசுப்பு தன்மையால் இளக வைக்கிறது. துணியால் துடைக்கும்போது கரைகள் போறது மட்டுமில்லாமல் பைப் மேல் ஒரு பாதுகாப்பு லேயர் உருவாகிறது. இதனால் அடுத்த முறை தண்ணீர் பட்டால் அது நிற்காமல் வழிஞ்சு ஓடிடும். புதுசாக கறைகள் படியாது.

இதையும் படிங்க: Mixer Grinder Cleaning: வெறும் 2 நிமிடத்தில் மிக்ஸி ஜார் பிசுக்கு நீங்க சூப்பர் டிப்ஸ்! தேய்க்கவே வேணாம்!

34
இப்படி பயன்படுத்தி பைப் கறையை நீக்குங்கள்

முதலில் பைப்பை ஒரு காய்ந்த துணியால் துடைச்சுக்கோங்க. அப்புறம், ஒரே ஒரு சொட்டு வாஸ்லின் எடுத்து பைப் முழுவதும் தடவுங்க. ஒரு 10 செகண்ட் கழித்து சுத்தமான காட்டன் துணியை வைத்து பாலிஷ் பண்ற மாதிரி நல்லா துடைங்க. இந்த ஹேக் கரையை நீக்குறது மட்டுமில்லாமல் ஹோட்டலில் இருக்கும் மாதிரி பைப்புக்கு ஒரு சூப்பர் பளபளப்பைக் கொடுக்கும்.

வாஸ்லின் உப்புக்கறையை எப்படி நீக்குகிறது?

வாஸ்லின் உண்மையில் உப்புக்கறையை வேதியியல் ரீதியாகக் கரைப்பதில்லை. உப்புக்கறைகள் மேடு பள்ளமான நுண் துளைகளைக் கொண்டவை. வாஸ்லினைத் தடவும்போது, அது இந்தத் துளைகளை நிரப்பி ஒளியைச் சீராகப் பிரதிபலிக்கச் செய்கிறது. இதனால் கறை மறைந்தது போன்ற தோற்றம் தற்காலிகமாகக் கிடைக்கிறது.

வாஸ்லின் மெல்லிய பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதால், தண்ணீர் துளிகள் அதில் தங்காமல் நழுவி விழும். இது புதுக் கறைகள் உருவாவதைச் சில நாட்களுக்குத் தாமதப்படுத்தும்.

இதையும் படிங்க: Mineral Water: மினரல் வாட்டரை சூடு பண்ணி குடிக்கிறீங்களா? நல்லதா? கெட்டதா? அறிவியல் சொல்வது என்ன?

44
வாஸ்லின் பயன்படுத்தும்போது இதையும் கவனியுங்கள்

எண்ணெய் பிசுபிசுப்பு: அதிகளவு வாஸ்லின் தடவினால், தூசி மற்றும் அழுக்குகள் அதில் எளிதில் ஒட்டிக்கொள்ளும்.

பாதுகாப்பு எச்சரிக்கை: குளியலறை குழாய்கள் அல்லது கைப்பிடிகளில் அதிகளவு வாஸ்லின் பயன்படுத்தினால், கை நழுவ வாய்ப்புள்ளது. எனவே மிகவும் குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.

எலுமிச்சையும் பைப் கறைகளை நீக்கும்

வாஸ்லின் மட்டுமின்றி வெள்ளை வினிகரை துணியில் நனைத்து கறை உள்ள இடத்தில் 15 நிமிடங்கள் சுற்றி வைத்தாலும் உப்புக்கறைகள் காணாமல் போய் விடும். இதேபோல் பாதியளவு எலுமிச்சையில் சமையல் சோடா தொட்டு கறை மீது தேய்த்தாலும் கறைகள் மாயமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories