ஏர்கூலர்ல இருந்து பேட் ஸ்மெல் வருதா? இந்த ஒரு பொருளை மட்டும் மாத்துங்க.! செலவே இல்லாமல் சரி செய்யலாம்.! துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி.!

Published : Apr 24, 2026, 03:29 PM IST

How to Remove Air Cooler Smell in Tamil :  நம் வீட்டில் இருக்கும் ஏர் கூலரிலிருந்து சில சமயம் வித்தியாசமான வாசனை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே நம்மால் எளிதாக தீர்வு காண முடியும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  

PREV
16
How to Remove Air Cooler Smell in Tamil

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் ஏசி மற்றும் ஏர் கூலர் ஆகியவற்றை நோக்கி ஓடுகின்றனர். ஆனால் பலராலும் ஏசி வாங்க முடிவதில்லை. எனவே நடுத்தர மற்றும் ஏழைக் குடும்ப மக்கள் ஏர்கூலரை சிறந்த தேர்வாக தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் ஏர் கூலரை பராமரிப்பது என்பது கடினமான காரியமாக உள்ளது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் இருக்கிறது. அதற்கு வீட்டிலேயே எளிமையான தீர்வு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
ஏர்கூலர் துர்நாற்றம் நீங்க

ஏசியைப் போல் அல்லாமல் ஏர்கூலர் தண்ணீரை பயன்படுத்தி இயங்குகிறது. இதன் காரணமாகவே ஏர்கூலரில் இருந்து சில்லென்ற காற்று கிடைக்கிறது. ஆனால் சில நாட்கள் தொடர்ந்து பயன்படுத்திய பிறகு ஏர் கூலரிலிருந்து துர்நாற்றம் வீசுவது இயல்பானது. தண்ணீர், தூசி, பூஞ்சை அல்லது பாக்டீரியாக்களால் இந்த துர்நாற்றம் ஏற்படுகிறது. தினமும் உங்கள் ஏர்கூலரை பழைய தண்ணீருடன் இயக்கும்பொழுது இந்த பிரச்சனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பிரச்சனைகளை யாருடைய உதவியும் இல்லாமல் வீட்டிலேயே நம்மால் சரி செய்ய முடியும்.

36
கூலர் நாற்றத்தை போக்க எளிய வழி

முதல் வேலை ஏர்கூலர் தொட்டியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பழைய தண்ணீரை முழுமையாக அகற்றிவிட்டு, தினமும் புதிய நீரை நிரப்ப வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு அதன் உட்புற தொட்டியை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். குறிப்பாக தண்ணீரில் வினிகரை கலந்து சுத்தம் செய்வதன் மூலம் பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு, துர்நாற்றமும் குறையும். வினிகர், உப்பு, எலுமிச்சம் பழம் கொண்டு நன்றாக தேய்த்து கழுவுவதன் மூலம் துர்நாற்றத்தை கணிசமாக குறைக்க முடியும்.

46
கூலர் தண்ணீர் வாடை வர காரணம்

ஏர்கூலரிலிருந்து துர்நாற்றம் வீசுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் அதில் வைக்கப்பட்டுள்ள பேட்கள் தான் (Cooling Pad). இந்த பேட்களில் அதிகமாக தூசி சேர்ந்தால் அதிலிருந்து வரும் காற்றிலும் துர்நாற்றம் வீசும். எனவே மாதம் ஒருமுறை அல்லது இருமுறை இந்த பேட்களை அகற்றி கழுவுவது நல்லது அவை மிகவும் பழையதாக மறுசுழற்சி செய்ய முடியாத அளவிற்கு இருந்தால் அதை அகற்றி விட்டு புதிய பேட்களை வாங்கி பொருத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த புதிய பேட்களை பொருத்துவதன் மூலம் சுத்தமான காற்றை நம்மால் பெற முடியும்.

56
ஏர்கூலர் பராமரிப்பு குறிப்புகள்

ஏர் கூலரை நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் வைக்க வேண்டியது அவசியம். இதை தூசிகள் படிந்த அறையில் அல்லது மூடிய அறையில் வைத்தால் துர்நாற்றம் நீடிக்கும். துர்நாற்றம் பிரச்சனையை குறைப்பதற்கு தூய்மை மிகவும் அவசியம். அதிக தூசிகள் சேர்ந்து பேட்கள் அடைத்துக் கொண்டால் ஏர்கூலர் அதிக வெப்பமாகி அதில் உள்ள மோட்டார் பழுதாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதிக தூசிகள் சேராமல் நல்ல காற்றோட்டமான இடங்களில் வைக்க வேண்டும். காற்று வரும் இடங்களான கதவுகளுக்கு முன் வைப்பது அல்லது ஜன்னலுக்கு அருகில் வைப்பது நல்லது.

66
ஏர்கூலர் டிப்ஸ் தமிழ்

அடிக்கடி சுத்தம் செய்தல், முறையான பராமரிப்பு, தூசி சேராமல் பார்த்துக் கொள்ளுதல், பேட்களை அடிக்கடி மாற்றுதல், தண்ணீரை இரு நாளைக்கு ஒருமுறையாவது மாற்றுதல் போன்றவற்றின் மூலம் ஏர்கூலரை சுத்தமாக பராமரிக்க முடியும். அதேபோல் நல்ல குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியான காற்றையும் நம்மால் பெற முடியும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கோடை காலத்தில் எந்த பிரச்சனையும் இன்றி குளிர்ந்த காற்றை நீங்கள் பெறலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories