AC Bill Tips: நாள் முழுக்க ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? இந்த 5 சீக்ரெட் டிப்ஸ் உங்களுக்காக.!

Published : May 14, 2026, 12:06 PM IST

How to Reduce Current Bill Using AC : சூட்டையும், புழுக்கத்தையும் தாங்க முடியாம பகல், ராத்திரி ஏசி ஓடுதா? சில டிப்ஸை ஃபாலோ பண்ணா, ஏசி எவ்வளவு ஓடினாலும் கரண்ட் பில்லை கண்ட்ரோலா வெச்சுக்கலாம். அது எப்படின்னு பாப்போம். 

PREV
17
How to Reduce Current Bill Using AC

’என்னடா இது வெயிலு... சூரியன் நம்மளையே சுத்தி வர்ற மாதிரி இருக்கே’... இதுதான் இப்போ நம்ம எல்லாரோட மைண்ட் வாய்ஸ். வெளியில போனா வெயில், வீட்டுக்குள்ள இருந்தா புழுக்கம். ஏசி போட்டா கரண்ட் பில் பயம். இந்த கவலையெல்லாம் இனி வேணாம். நாள் முழுக்க ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வர்றதுக்கு சில ஸ்மார்ட் டிப்ஸ் இருக்கு. அத ஃபாலோ பண்ணா போதும்.

27
1. ஏசி டெம்ப்ரேச்சர் எவ்வளவு இருக்க வேண்டும்?

நிறைய பேர் ஏசியை 16°C அல்லது 18°C-ல வெச்சா ரூம் சீக்கிரம் கூல் ஆகிடும்னு நினைக்கிறாங்க. ஆனா அது தப்பு. ஏசியை 24°C-ல இருந்து 26°C-க்குள்ள வெச்சுப் பயன்படுத்துறதுதான் நம்ம உடம்புக்கும் நல்லது, பர்ஸுக்கும் நல்லது. நீங்க டெம்ப்ரேச்சரை ஒரு டிகிரி கூட்டினா, 6% கரண்ட் மிச்சமாகும். குறைச்சா, கரண்ட் செலவு எகிறி, பில் எகிறிடும்.

37
2. ஃபேன் + ஏசி காம்பினேஷன்

ஏசி ஓடும்போது, சீலிங் ஃபேனை குறைஞ்ச ஸ்பீட்ல போடுங்க. இது ஏசியில இருந்து வர்ற குளிர் காத்தை ரூமோட எல்லா மூலைக்கும் பரவச் செய்யும். இதனால ரூம் சீக்கிரமா கூல் ஆகி, ஏசி கம்ப்ரசர் மேல இருக்கிற பாரம் குறையும். அப்போ கரண்ட் பில்லும் குறையும்ல?

47
3. சூட்டை அறைக்குள் வர விடாதீர்கள்

ஜன்னல், கதவு வழியா நேரடியா சூரிய வெளிச்சம் ரூமுக்குள்ள வந்தா, ஏசி எவ்வளவு வேலை செஞ்சாலும் ரூமை கூல் பண்றது கஷ்டம். அதனால, தடிமனான ஸ்கிரீன் இல்லனா ஹீட் ரிஃப்ளெக்டிவ் ஃபிலிம் பயன்படுத்துங்க. இதனால ரூமுக்குள்ள வர்ற சூட்டை 30% வரை குறைக்கலாம். இது ஏசி மேல இருக்கிற அழுத்தத்தை குறைச்சு கரண்ட்டை மிச்சப்படுத்தும்.

57
4. ஃபில்டர் க்ளீன்... பில் டவுன்..!

ஏசியை எவ்வளவு நல்லா மெயின்டெயின் பண்றீங்களோ, அவ்வளவு நல்லா அது வேலை செய்யும். முக்கியமா, ஏசி ஃபில்டரை சுத்தமா வெச்சுக்கணும். அதுல தூசி சேர்ந்தா, காத்தை வெளியே தள்ளுறதுக்கு ஏசி அதிக சக்தியைப் பயன்படுத்தும். இதனால கரண்ட் செலவு அதிகமாகும். 15 நாளைக்கு ஒரு தடவை நீங்களே ஃபில்டரை கழட்டி, தண்ணியில கழுவி மாட்டுனா போதும். ஒவ்வொரு வருஷமும் கோடைக்காலம் ஆரம்பிக்கும்போது ஏசியை சர்வீஸ் பண்ணிடுங்க.

67
5. கதவு இடுக்குகளை சரிபாருங்கள்

ரூம் கதவு அல்லது ஜன்னல் இடுக்கு வழியா கூலிங் காத்து வெளிய போகுதா? சின்ன கேப் இருந்தா கூட, அது உங்க கரண்ட் பில்லுல பெரிய ஓட்டையை போட்டுடும். டோர் சீல்ஸ் அல்லது துணியை வெச்சு அந்த கேப்பை அடைச்சிடுங்க. இதனால குளிர் காத்து ரூமுக்குள்ளேயே சுத்தி வரும்.

77
6. ஸ்லீப் மோடு (Sleep Mode)

ராத்திரி தூங்கும்போது ஏசியில 'ஸ்லீப் மோடு' ஆன் பண்ணுங்க. இது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் டெம்ப்ரேச்சரை கொஞ்சம் கொஞ்சமா அதிகப்படுத்தும். இதனால, விடியற்காலையில ஏசி தேவையில்லாம ஓடுறது நின்னுடும்… கரண்ட்டும் மிச்சமாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories