ஆதார் கார்டில் இ-மெயில் ஐ.டி இணைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் இனி எந்தக் கட்டணமும் இல்லை. 2026 டிசம்பர் 31 வரை முற்றிலும் இலவசமாக ஆன்லைனில் புதுப்பிக்கலாம் என UIDAI அறிவித்துள்ளது.
ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ புதுப்பிப்பது மற்றும் இணைப்பது தற்போது இலவசமாக்கப்பட்டுள்ளது. எனவே இலவசமாக ஆன்லைனில் இ-மெயில் ID ஐ ஆதார் கார்டில் இணைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ இணைப்பது மற்றும் அப்டேட் செய்வது குறித்து ஒரு முக்கியமான மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. UIDAI அறிவிப்பின் படி ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியை இணைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் எந்த கட்டணமும் இல்லை; முற்றிலும் இலவசமாக ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ புதுப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ புதுப்பிப்பதற்கு அல்லது இணைப்பதற்கு 75 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது எந்தவொரு கட்டணமும் இன்றி இலவசமாக இந்த வேலையை நாம் செய்யலாம். ஆனால் இதற்கு ஒரு கால வரம்பு இருக்கின்றது. இந்த இலவச சலுகையைப் பெறுவதற்கான வழிகள் என்ன, எப்படி ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ ஆன்லைன் மூலமே புதுப்பிக்கலாம் என்ற வழிமுறைகளை பற்றி பார்போம்.
24
ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ புதுப்பிப்பதற்கான காரணங்கள்
சைபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த காலகட்டங்களில் அதனைத் தடுப்பதற்கே ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ இணைக்கும் முறையை அரசு கொண்டுவந்துள்ளது. உங்களுடைய ஆதார் கார்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் e-KYC சரிபார்க்கப்பட்டால் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை வரும்.
புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு PDF ஆக உங்களுடைய இ-மெயில் ID க்கு வரும். UIDAI ஐ தொடர்புகொள்ள அல்லது புகார் வழங்க இந்த இ-மெயில் ID தேவைப்படும்.
34
ஆப் மூலம் புதுப்பிக்கும் முறை
ஆதார் கார்டில் இ-மெயில் ID இணைப்பதற்காக நாம் ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் இந்த மாற்றத்தை நாம் மிக எளிதாகச் செய்யலாம்:
அதிகாரபூர்வ mAadhaar / Aadhaar ஆப்பைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஆப்பை திறந்து பாதுகாப்பான முறையில் லாக் இன் செய்து கொள்ளவும். ஆப்பில் 'Update Email ID' என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும். ஆதார் கார்டுடன் இணைக்க விரும்பும் இ-மெயில் ID ஐ உள்ளிடவும். அதன் பின் அந்த இ-மெயில் ID க்கு ஒரு OTP வரும். அந்த OTP ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும். OTP சரிபார்க்கப்பட்டவுடன் மின்னஞ்சல் புதுப்பிப்பு கோரிக்கை ஏற்கப்படும்.
ஆதார் கார்டில் இ-மெயில் ID ஐ புதுப்பிப்பது மட்டுமே தற்போதைய இலவசமாகும். 2026 டிசம்பர் 31 வரை இந்தச் சேவையை இலவசமாகப் பெறலாம். ஆதார் மையத்திற்குச் சென்று பெயர், புகைப்படம் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்வதற்கு வழக்கம் போல அதற்கான கட்டணங்களை நாம் செலுத்த வேண்டும். அந்த சேவை இலவசம் கிடையாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.