உங்கள் மொபைல் போன் வேகத்தை அதிகரிக்க இந்த 5 டிப்ஸ்களை செய்து பாருங்க

Published : May 07, 2026, 04:51 PM IST

வேலை, கேமிங் எனத் தொடர் பயன்பாட்டால் மொபைல் வேகம் குறைந்து ஹேங் ஆகிறதா? கவலை வேண்டாம்! உங்கள் போனின் வேகத்தை மீண்டும் அதிகரிக்கவும், ஹேங் ஆகும் பிரச்சனையைச் சரிசெய்யவும் இதோ 5 சூப்பரான எளிமையான டிப்ஸ்! நிமிஷத்துல உங்க போன் சூப்பரா இயங்கும்.

PREV
15
லாக்-ஸ்கிரீன் விட்ஜெட்களை குறையுங்கள் :

நம்மில் பலர் வானிலை, செய்திகள் என லாக்-ஸ்கிரீனில் பல விட்ஜெட்களை வைத்திருப்போம். இவை போன் தூங்கும் போது கூட பின்னணியில் டேட்டாவை இழுத்துக் கொண்டே இருக்கும். அத்தியாவசியமான விட்ஜெட்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை நீக்குங்கள். இது ரேம் (RAM) சுமையை குறைத்து, போனை எப்போதும் 'உஷாராக' வைத்திருக்கும்.

25
'GPU Rendering' - இதைப் பண்ணிப் பாருங்க!

போனின் செட்டிங்ஸில் உள்ள 'Developer Options'-க்கு சென்று "Force GPU Rendering" என்பதை ஆன் செய்யுங்கள். சாதாரணமாக சிபியு (CPU) செய்யும் வேலைகளை கிராபிக்ஸ் கார்டு பகிர்ந்து கொள்ளும். இதனால் ஆப்ஸ் ஓப்பனிங் வேகம் மற்றும் ஸ்க்ரோலிங் அனிமேஷன் செம ஸ்மூத் ஆக மாறும்.

35
'லைட்' வெர்ஷன் ஆப்ஸ் பயன்படுத்துங்கள் :

ஃபேஸ்புக், மெசஞ்சர் போன்ற ஹெவி ஆப்ஸ்கள் உங்கள் போனின் மொத்த வேகத்தையும் உறிஞ்சிவிடும். உங்கள் போன் பழைய மாடல் என்றால், அசல் ஆப்ஸ்க்கு பதில் FB Lite, Instagram Lite போன்றவற்றை பயன்படுத்துங்கள். இது போன் சூடாவதை குறைப்பதுடன், பேட்டரியையும் மிச்சப்படுத்தும்.

45
தேவையற்ற 'Sync' ஆப்ஷனை ஆஃப் செய்யுங்கள் :

உங்கள் போன் ஒவ்வொரு நிமிஷமும் கூகுள் டிரைவ், காலண்டர், காண்டாக்ட்ஸ் என அனைத்தையும் சிங்க் (Sync) செய்து கொண்டே இருக்கும். செட்டிங்ஸில் சென்று உங்களுக்கு தேவையில்லாத ஆப்ஸ்களின் 'Auto-Sync' வசதியை நிறுத்துங்கள். இது பிராசஸர் (Processor) மீது இருக்கும் தேவையற்ற அழுத்தத்தை பாதியாக குறைக்கும்.

55
ஸ்டோரேஜில் '10% ரூல்' :

உங்களிடம் 128GB போன் இருந்தால், எப்போதும் குறைந்தது 12GB காலி இடமாவது இருக்க வேண்டும். ஸ்டோரேஜ் முழுமையாக நிரம்பினால் போன் 'மூச்சுத்திணற' ஆரம்பிக்கும். வாட்ஸ்அப் வீடியோக்களை உடனுக்குடன் டெலீட் செய்யாமல், அவற்றை 'டெலிகிராம்' (Telegram) போன்ற கிளவுட் ஸ்டோரேஜில் சேமித்து வைத்துவிட்டு போனில் இருந்து நீக்கிவிடுங்கள். போன் எப்போதும் புத்தம் புதிது போல மின்னும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories