பொய் சொல்ற குழந்தைகளை மாத்தனுமா? பெற்றோர் இந்த '3' விஷயங்களை அவங்ககிட்ட சொன்னா போதும்!!

First Published | Oct 29, 2024, 2:13 PM IST

Honesty in children : உங்கள் உங்கள் குழந்தைகள் அடிக்கடி பொய் சொல்லுகிறார்கள் என்றால், அவர்களிடம் பெற்றோர்கள் சொல்ல வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Guiding Children Towards Honesty In Tamil

குழந்தைகள் வளர வளர அவர்கள் சில சமயங்களில் பொய் சொல்ல தொடங்குவார்கள். அவர்கள் ஏதாவது ஒரு தவறு செய்தால் அதை மறைப்பதற்காக பொய் சொல்வார்கள். குழந்தைகள் பொய் சொல்லும் போது பயம் அல்லது குழப்பத்தின் காரணமாக அப்படி செய்கிறார்கள். 
ஆனால் இதை அப்படியே விட்டு விடக்கூடாது. 

Guiding Children Towards Honesty In Tamil

உங்கள் குழந்தை பொய் சொல்லும் போது அந்த சூழ்நிலையில் அவர்களை கவனமாக கையாளுவது மிகவும் அவசியம். மேலும், குழந்தைகள் பொய் சொல்வதற்கான அவசியத்தை ஏன் உணர்ந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அதற்கான காரணத்தை பெற்றோர்களாகிய நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இது தவிர குழந்தைகளுக்கு நேர்மை மதிப்பு குறித்து அறிந்து கொள்ள வேண்டும். எனவே பெற்றோர்களே நீங்கள் உங்கள் குழந்தைக பொய் சொல்லும் போது அவர்களிடம் சொல்ல வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள் உள்ளன. 

இதையும் படிங்க: குழந்தைகிட்ட ரொம்ப கண்டிப்பா நடந்துக்காதீங்க.. இல்லனா இந்த பாதிப்புகள் வரும்!

Latest Videos


Guiding Children Towards Honesty In Tamil

அவை உண்மையில் முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் மற்றும் அவை கடினமாக இல்லாமல் தெளிவான விஷயங்களை கொடுக்கும். முக்கியமாக உறவுகளின் நம்பிக்கையின் மதிப்பை புரிந்து கொள்ள பெரிதும் உதவும். சரி வாங்க இப்போது அந்த 3 முக்கிய விஷயங்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  குழந்தைங்க பல்லை சொத்தையாக்கும் '4' உணவுகள்..! முத்து போன்ற பற்களுக்கு டிப்ஸ்

Guiding Children Towards Honesty In Tamil

1. உண்மையில் நடந்தது என்ன?

உங்கள் குழந்தை பொய் சொல்லுவதை நீங்கள் உணர்ந்தால் முதலில் அவர்களிடம் "உண்மையில் நடந்தது என்ன?" என்ற கேள்வியை கேளுங்கள். ஏனெனில் இந்த கேள்வியானது உங்கள் குழந்தையை நேர்மையாக இருக்க ஊக்குவிக்கும். இது தவிர நீங்கள் உங்கள் குழந்தையின் மீது கோபமாக இல்லாமல் இருப்பதை இது காட்டுகிறது. மேலும் குழந்தைக்கு அதிக அழுத்தத்தை கொடுக்காமல் அவர்கள் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பையும் நீங்கள் வழங்குகிறீர்கள் என்பதையும் இந்த கேள்வி காட்டுகிறது.

2. தவறிலிருந்து கற்றுக் கொள்

எல்லோரும் தவறு செய்வது இயல்பானது தான் ஏனெனில் தவறிலிருந்து பல விஷயங்களை கற்க முடியும் என்பதை உங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ள வைக்கவும். நீ மட்டும் தவறு செய்யவில்லை என்பதே உங்களுக்கு குழந்தைக்கு சொல்லுங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் குழந்தையிடமிருக்கும் பயம் குறைந்து உண்மையை ஒத்துக் கொள்வார்கள்.

Guiding Children Towards Honesty In Tamil

3. தவறை சரி செய்வது எப்படி?

பொய் சொல்லும் குழந்தையிடம் இந்த அணுகு முறையில் நடந்து கொண்டால் தண்டனை குறித்து பயப்பட மாட்டார்கள். சிக்கலை தீர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் செய்த தவறான விஷயங்களை சரி செய்ய அவர்களுக்கு உதவ நீங்க தயாராக இருக்கிறீர்கள் என்பதை இந்த அணுகுமுறை காட்டுகிறது. மேலும் இது அவர்களுக்கு நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள் என்பதையும் காட்டுகிறது. இதன் மூலன் அவர்களுக்கு பொறுப்புணர்வு வரும்.

குறிப்பு : மேலே சொன்ன விஷயங்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தை நேர்மையை கற்றுக் கொள்வார்கள். மேலும் அவர்களது நம்பிக்கை மற்றும் புரிதல் வளரும். முக்கியமாக உங்கள் இருவரும் இடையேயான உறவு வலுப்படும்.

click me!