How To Grow Camphor Plant At Home : கற்பூரம் என்பது இந்து மதத்தில் பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் ஆகும். இதிலிருந்து வரும் வாசனை பூச்சிகள், கொசுக்களை விரட்டுவதில் உதவியாக இருக்கும். ஆனால் நீங்கள் எப்போதாவது வீட்டில் கற்பூர செடியை வைத்திருப்பதை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உங்களது வீட்டு தோட்டத்தில் ஒரு தொட்டியில் கற்பூர செடியை வளர்க்கும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
26
கற்பூர செடி:
கற்பூரம் செடி குறைந்த பராமரிப்பில் வளரும் ஒரு தாவரமாகும். கற்பூர செடி சுற்றுச்சூழலுக்கு ரொம்பவே நல்லது. மேலும் இந்த செடி காற்றை சுத்திகரிக்க உதவுகிறது. அதன் நல்ல விஷயம் என்னவென்றால், இதன் குறைவான பராமரிப்பு காரணமாக இது செடியை தொட்டியில் வளர்ப்பது கடினமானது அல்ல. அதன் அழகு உங்களது தோட்டத்தின் அழகை மேம்படுத்தும். எனவே கற்பூர செடியை உங்களது தோட்டத்தில் மிக எளிதாக வளர்க்கும் முறை பற்றி இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
36
எப்போது நடனும்?
கற்பூரத்தின் விதைகள் பொதுவாக சூடான மண்ணில் மிக வேகமாக முளைக்கும். எனவே இந்த செடியை நீங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் நடவு செய்திருக்கு சிறந்த நேரம் எதுவென்றால், வசந்தகாலம் முதல் கோடை காலம் வரை ஆகும். அதாவது பிப்ரவரி முதல் மே வரை. எனவே நீங்கள் கற்பூர செடியை வளர்க்க அதன் விதைகளை வாங்கி வீட்டில் வளர்க்கவும்.
உங்களது வீட்டில் பெரிய தோட்டம் இருந்தால் நேரடியாக கற்பூர செடியை நிலத்தில் நடலாம். ஒருவேளை தோட்டம் இல்லை என்றால், நீங்கள் ஒரு பெரிய அளவிலான தொட்டி வாங்க வேண்டும். கற்பூர செடிக்கு ஈரமான மண் அல்லது மணல் நிறைந்த மண் சிறந்ததாக இருக்கும். மேலும் இதற்கு நீங்கள் மாட்டு சாணம், மண்புழு உரம் ஆகியவற்றை கலந்து மண்ணை தயாரிக்கவும். பிறகு அந்த மண்ணை உங்களது தொட்டியில் வைக்க வேண்டும்.
விதையை பயன்படுத்தி கற்பூர செடியை நடுவதற்கு முதலில் தொட்டியில் மண்ணின் நிரப்பி, கற்பூர விதைகளை மண்ணில் சுமார் 10 செ.மீட்டருக்கு நடவும். பிறகு தண்ணீர் ஊற்றவும். விதை முளைப்பதற்கு ஈரப்பதம் தேவை. அதுபோல தொட்டியை நிழல் அல்லது வடிகட்டிய சூரிய ஒளிபடும் இடத்தில் வைக்க வேண்டும். செடிகள் சரியான அளவில் அடைந்ததும் அவற்றை பெரிய தொட்டியில் இடமாற்றம் செய்ய வேண்டும்.
66
செடியை பராமரிப்பது எப்படி?
கற்பூர செடி உயரமாகவும், ஆரோக்கியமாகவும் வளர நிறைய சூரிய ஒளி தேவைப்படும். இருப்பினும் அது குறைந்த சூரிய ஒளியிலும் உயிர் வாழ முடியும். கற்பூர செடிக்கு நல்ல வளர்ச்சிக்கு சுமார் 25 முதல் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அவசியம். இந்தச் செடிக்கு ஈரமான மண் தேவை. எனவே தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச மறக்காதீர்கள் வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரை ஒவ்வொரு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கும் உரங்களை பயன்படுத்துங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.