Watery Dal: பருப்பு குழம்பு தண்ணியா போச்சா? கெட்டியாக்க இந்த 5 கிச்சன் டிப்ஸ் போதும்!

Published : May 28, 2026, 10:55 PM IST

Watery Dal:: பருப்பு வேகவைக்கும்போது தண்ணீர் அதிகமாகி குழம்பு நீர்த்துப் போயிடுச்சா? கவலைப்படாதீங்க! கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்தே 5 நிமிடத்தில் ஹோட்டல் ஸ்டைலில் குழம்பை கெட்டியாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

PREV
16
நொடியில் கெட்டியாக்கலாம்

சமைக்கும் அவசரத்தில் பருப்பில் தண்ணீர் அதிகமாகி, குழம்பு நீர்த்துப் போவது சகஜம். இது சுவையைக் கெடுக்கும். ஆனால், இதை கொட்ட வேண்டாம். உங்கள் கிச்சனில் இருக்கும் சில பொருட்களை வைத்தே குழம்பை கெட்டியாகவும், சுவையாகவும் மாற்றலாம். அதற்கான சூப்பர் டிப்ஸ் இதோ.

26
கடலை மாவு
ஒரு டீஸ்பூன் வறுத்த கடலை மாவை ஒரு சின்ன கிண்ணத்தில் எடுங்க. பச்சை மாவை விட வறுத்த மாவு நல்ல வாசனையைக் கொடுக்கும். அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் பேஸ்ட் போல கலக்குங்க. இந்த பேஸ்ட்டை கொதிக்கும் பருப்பு குழம்பில் ஊற்றி கிளறினால், சில நிமிடங்களில் குழம்பு கெட்டியாகி, சுவையும் கூடும்.
36
வேகவைத்த உருளைக்கிழங்கு
வேகவைத்த உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால், ஒன்றை எடுத்து நன்றாக மசிச்சுக்கோங்க. இந்த மசித்த உருளைக்கிழங்கை நீர்த்த குழம்பில் சேர்த்து நல்லா கலக்குங்க. இது குழம்போடு கலந்து, ஒரு 'கிரீமி'யான தன்மையைக் கொடுக்கும். குழம்பு கெட்டியாவதுடன், சுவையும் கூடுவதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.
46
மத்து அல்லது கரண்டி
பருப்பு சரியாக வேகாதபோதும், தண்ணீர் கூடினாலும் இந்த பழைய முறையைப் பயன்படுத்தலாம். மத்து அல்லது பெரிய கரண்டியை வைத்து, பாத்திரத்தின் ஓரத்தில் பருப்பை அழுத்தி நன்றாக மசிங்க. இப்படி செய்யும்போது, பருப்பில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் (Starch) வெளியேறி, குழம்புக்கு நல்ல கெட்டித்தன்மையைக் கொடுக்கும்.
56
கார்ன் ஸ்டார்ச்
ஹோட்டல்களில் கிரேவிகள் கெட்டியாக இருக்க கார்ன் ஸ்டார்ச் (சோள மாவு) தான் பயன்படுத்துவாங்க. ஒரு டீஸ்பூன் கார்ன் ஸ்டார்ச்சை குளிர்ந்த நீரில் கரைச்சுக்கோங்க (சூடான நீரில் போட்டால் கட்டி பிடிக்கும்). இந்தக் கலவையை கொதிக்கும் குழம்பில் ஊற்றி, இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்க. குழம்பு உடனடியாக பளபளப்பாகவும், கிரீமியாகவும் மாறிவிடும்.
66
குறைந்த தீயில் கொதிக்க வைத்தல்
மேலே சொன்ன எந்தப் பொருளும் வீட்டில் இல்லை என்றால், இந்த சிம்பிள் வழியைப் பின்பற்றுங்க. குக்கர் மூடியைத் திறந்து, அடுப்பை சிம்மில் (Sim) வைங்க. குழம்பை அப்படியே 5 முதல் 10 நிமிடங்கள் வரை மெதுவாக கொதிக்க விடுங்க. இப்படிச் செய்வதால், குழம்பில் உள்ள அதிகப்படியான நீர் ஆவியாகி, குழம்பு தானாகவே கெட்டியாகிவிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories