Hotel Room: வெளியூர் செல்லும்போது ஹோட்டல்கள் அல்லது ஹோம்ஸ்டேக்களில் தங்குகிறீர்களா? ஹோட்டல் அறையில் மறைந்திருக்கும் கேமராக்களை எப்படி கண்டுபிடிப்பது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹோட்டலில் தங்கும்போது இந்த விஷயங்களையும் கவனியுங்க
நாம் வெளியூர் செல்லும்போது ஹோட்டல்கள், கெஸ்ட் ஹவுஸ்கள், ஹோம்ஸ்டேக்களில் தங்குவது வழக்கம். பலர் அறை சுத்தமாக இருக்கிறதா என்று மட்டும்தான் பார்ப்பார்கள். ஆனால், அதைவிட முக்கியம் நமது பாதுகாப்பு. நமது பொருட்கள் பத்திரமாக இருந்தால் மட்டும் போதாது. நமது டிஜிட்டல் டேட்டா மற்றும் தனிப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஹோட்டல் வைஃபை, ஸ்மார்ட் டிவி மற்றும் இணைய இணைப்பில் உள்ள மின்னணு பொருட்கள் மூலமாக நமது தனியுரிமைக்கு ஆபத்து வரலாம்.
இது போன்ற நேரங்களில் சில சிறிய விஷயங்களைக் கவனித்தாலே போதும். நமது தனிப்பட்ட தகவல்கள், மொபைல், லேப்டாப் மற்றும் ஆன்லைன் கணக்குகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். அறையில் ஓய்வெடுப்பதற்கு முன்பு, சில நிமிடங்கள் ஒதுக்கி சில விஷயங்களைச் சோதிப்பது மிகவும் முக்கியம். புதிய இடத்தில் தங்கும்போது எவையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
24
வைஃபை இணைக்கும் முன்பு கவனம் தேவை
ஹோட்டல்கள் மற்றும் கெஸ்ட் ஹவுஸ்களில் பொதுவாக இலவச வைஃபை வழங்குவார்கள். ஆனால், எல்லா நெட்வொர்க்குகளும் முழுப் பாதுகாப்பாக இருக்கும் என்று கூற முடியாது. எனவே, பொது வைஃபையைப் பயன்படுத்தும்போது வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பேமெண்ட்டுகளைத் தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை வி.பி.என் (VPN) அல்லது உங்களது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது நல்லது. வைஃபை இணைப்பதற்கு முன்பு, வரவேற்பறையில் (Reception) விசாரித்து சரியான வைஃபை பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள்.
34
அறையில் ரகசிய கேமரா உள்ளதா எனச் சோதிக்கவும்
ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, பெண்களைப் பதிவு செய்வதற்காக இதுபோன்ற கேமராக்கள் வைக்கப்படலாம். எனவே, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலாரம் கடிகாரங்கள், யு.எஸ்.பி சார்ஜர்கள், பிளக் பாயிண்டுகள், போட்டோ பிரேம்கள், கண்ணாடிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றில் கூட கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். இவற்றையெல்லாம் நன்றாகச் சோதித்துப் பாருங்கள். ஏதாவது பொருள் மீது சந்தேகம் வந்தால், அதைத் தொடாதீர்கள். உடனே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஹோட்டல் நிர்வாகம் அல்லது காவல்துறையில் புகார்ளியுங்கள்.
இப்போது பல ஹோட்டல்களில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர் மற்றும் இணைய இணைக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. இவற்றில் உங்களது தனிப்பட்ட கணக்குகளை லாக் இன் செய்யும்போது கவனமாக இருங்கள். தொலைக்காட்சிகளில் ஏதாவது ஓடிடி செயலிகளைப் பயன்படுத்தியிருந்தால், அறையைக் காலி செய்வதற்கு முன்பு லாக் அவுட் மறந்துவிடாதீர்கள். இதுபோன்ற சாதனங்களில் வங்கித் தகவல்களை உள்ளிடுவதை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.
ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு இதைச் செய்யுங்கள்
மொபைல் மற்றும் லேப்டாப்பிற்குத் தவறாமல் ஸ்கீரின் லாக் இடுங்கள். வலுவான பாஸ்வேர்ட் பயன்படுத்துங்கள். முக்கியமான ஆவணங்களை மொபைலில் வைத்திருக்க வேண்டாம். ஒருவேளை உங்களது சாதனம் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அதைக் கண்டுபிடிக்க 'Find My Device' விருப்பத்தை ஆன் செய்து வையுங்கள். ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு மொபைல் மற்றும் லேப்டாப் சாப்ட்வேர் அப்டேட் செய்வதும் முக்கியம் ஆகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.