Gas Stove Cleaning: கேஸ் ஸ்டவ்வின் இந்த பாகத்தை மறந்தா பெரிய ஆபத்து! இனிமே இப்படி கிளீன் பண்ணுங்க!

Published : Sep 15, 2026, 02:43 PM IST

Gas Stove Cleaning: கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்யும்போது ரெகுலேட்டரை சுத்தம் செய்வதும் மிகவும் அவசியம். அதில் சேரும் எண்ணெய் பிசுக்கு கேஸ் கசிவை ஏற்படுத்தலாம் என்பதால், அதைச் சுலபமாக சுத்தம் செய்யும் வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

PREV
14
கேஸ் ஸ்டவ் சுத்தம் செய்ய எளிதான டிப்ஸ்

இந்தியாவில் சமையலறையில் உள்ள அடுப்பு தெய்வமாகப் போற்றப்படுகிறது; காலையில் சமையலைத் தொடங்குவதற்கு முன்பு அதற்குப் பூஜை செய்வதும் வழக்கமாகும். தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் ஸ்டவ் பயன்படுத்தப்படும் நிலையில், சமையல் முடிந்ததும் ஸ்டவ்வைச் சுத்தம் செய்யும் பலரும், அதை ஆன் செய்யும் ரெகுலேட்டரைச் சுத்தம் செய்ய மறந்துவிடுகிறார்கள். ரெகுலேட்டரை ரெகுலராக சுத்தம் செய்யாவிடில் பெரும் ஆபத்தில் சென்று முடியும். ரெகுலேட்டரை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி? என பார்க்கலாம்.

24
ரெகுலேட்டரை ஏன் கிளீன் செய்வது அவசியம்?

ரெகுலேட்டருக்கும் ஸ்டவ்வுக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி இருக்கும். தினமும் சமைப்பதால், அந்த இடைவெளியில் எண்ணெய் பிசுக்கு போன்ற அழுக்குகள் சேர்ந்துவிடும். இந்த பிசுக்கு அந்த கேப்பை மூடிவிடும். இதனால், ரெகுலேட்டர் முழுமையாக வேலை செய்வதை நிறுத்திவிடும். இந்த அழுக்கால் நீங்கள் அடுப்பை அணைத்தாலும், லேசாக கேஸ் கசிய வாய்ப்புள்ளது. அதனால் ஸ்டவ்வுடன் ரெகுலேட்டரையும் சுத்தம் செய்ய வேண்டும்.

ரெகுலேட்டரை கிளீன் செய்வது எப்படி?

சில ஸ்டவ்களில் ரெகுலேட்டரை கழற்ற முடியும். அப்படிப்பட்ட ஸ்டவ்வாக இருந்தால், ரெகுலேட்டரை கழற்றி 10 நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு வையுங்கள். பிறகு, பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறு கலந்து ரெகுலேட்டரை சுத்தம் செய்யலாம். ஒருவேளை ரெகுலேட்டர் ஸ்டவ்வுடன் ஃபிக்ஸ் செய்யப்பட்டிருந்தால், ஒரு சிறிய குச்சி மூலம் இடைவெளியில் சிக்கியுள்ள அழுக்கை நீக்குங்கள்.

34
ரெகுலேட்டரை மாற்றிக்கொள்ளுங்கள்

பொதுவாக பர்னரில் இருந்து தீ சரியாக எரியவில்லை என்றால், அதை சுத்தம் செய்வார்கள் அல்லது மாற்றுவார்கள். அதேபோல, ரெகுலேட்டரின் பிடி மிகவும் இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ இருந்தால், உடனடியாக அதை மாற்றிவிடுங்கள். இந்த சிறிய மாற்றம் ஒரு பெரிய ஆபத்தைத் தடுக்கும்.

இப்போது ஸ்டீல், மார்பிள், கிளாஸ் என பல மாடல்களில் ஸ்டவ்கள் வருகின்றன. உங்கள் வீட்டில் எந்த மாடல் ஸ்டவ் இருந்தாலும், ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து திக்கான பேஸ்ட்டை தயார் செய்யுங்கள். இந்த பேஸ்ட்டை ஸ்டவ் மீது தடவி 10-15 நிமிடங்கள் கழித்து, சுத்தமான தண்ணீரால் கழுவி, காய்ந்த துணியால் துடைத்தால் போதும். உங்கள் ஸ்டவ் ஒவ்வொரு முறையும் புதுசு போல ஜொலிக்கும்.

44
கேஸ் குழாயையும் சோதனை செய்யணும்

ரெகுலேட்டரை இணைக்கும் ரப்பர் குழாயில் ஏதேனும் கீறல்களோ, விரிசல்களோ இருக்கிறதா என்பதையும் சோதனை செய்ய வேண்டும். இந்த குழாய்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது 2 முதல் 5 ஆண்டுகளுக்குள் மாற்றுவது அவசியம். மேலும், கேஸ் கசிவைச் சோதிக்க எரியும் தீக்குச்சியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சோப்பு நீரைப் பயன்படுத்தி கசிவு உள்ளதா? என்பதை எளிதில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories