டூத் பேஸ்ட் பற்களுக்கு மட்டுமல்ல.. இவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம் தெரியுமா?

Published : Oct 25, 2023, 11:59 AM ISTUpdated : Oct 25, 2023, 12:05 PM IST

டூத் பேஸ்ட் உதவியுடன், நீங்கள் மிகவும் பிடிவாதமான கறைகளை கூட நிமிடங்களில் அகற்றலாம். இன்று நாங்கள் உங்களுக்கு சில எளிய ஹேக்குகளை சொல்லப் போகிறோம்.  

PREV
14
டூத் பேஸ்ட் பற்களுக்கு மட்டுமல்ல.. இவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம் தெரியுமா?

நாம் அனைவரும் தினமும் பல் விளக்குகிறோம். பல் விளக்குவதற்கு சிறந்த டூத் பேஸ்ட் தேவை. இருப்பினும், டூத் பேஸ்டை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது மிகச் சிலருக்குத் தெரியும். டூத் பேஸ்ட் பற்களை சுத்தம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் விரும்பினால், அதன் உதவியுடன் வீட்டையும் சுத்தம் செய்யலாம்.

24

போன் கவர்: உங்கள் போன் கவர் அழுக்காகிவிட்டால், அதை சுத்தம் செய்ய டூத் பேஸ்டை நீங்கள் பயன்படுத்தலாம். சேதமடைந்த மற்றும் பழைய டூத் பிரஷ்சில், டூத் பேஸ்ட் தடவி அதன் உதவியுடன் உங்கள் போன் கவரில் சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்த பிறகு, போன் கவரை தண்ணீரில் நன்கு கழுவவும். இப்போது உங்க போன் கவர் புதிய போன் கவர் போல் ஜொலிக்க ஆரம்பிக்கும்.

இதையும் படிங்க:  உஷார்..! குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் "டூத்பேஸ்ட்" பற்றி தெரியுமா...?

34

லிப்ஸ்டிக் கறை நீக்க: பல நேரங்களில் வீட்டின் சுவர்களில் லிப்ஸ்டிக் கறைகள் இருக்கும். இதனால் வீட்டின் சுவர்கள் அழுக்காக காட்சியளிக்கிறது. நீங்களும் உங்கள் வீட்டின் சுவர்களை சுத்தம் செய்ய விரும்பினால், நீங்கள் டூத் பேஸ்ட்டை எடுத்து, கறை இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, ஈரமான துணியால் சுவரை சுத்தம் செய்யவும். இப்போது சுவரில் உள்ள கறை நீங்கி இருக்கும்.

இதையும் படிங்க:  உங்களுக்குத் தெரியுமா? டூத் பேஸ்ட் கொண்டு முகப்பருவை சரி செய்யலாம்...

44

காபி கறை: சில சமயங்களில் சுவரில் காபி கறைகளும் இருக்கும். குறிப்பாக நம் வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கும்போது இது நடக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், கறைகளை அகற்ற  டூத் பேஸ்ட் உதவியுடன், கறைகளை நிமிடங்களில் அகற்றலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Read more Photos on
click me!

Recommended Stories