
கொரியன் சீரிஸ் பார்ப்பது நம் நாட்டில் பரவலாகி வருகிறது. பலர் கொரியன் கலாசாரத்திற்கு மாறிவிடும் அளவுக்கு அதன் மீது ஆர்வமாக உள்ளனர். கொரிய மொழியில் வணக்கம் சொல்வது தொடங்கி அந்த நாட்டு உணவுகளுக்கு என ரெஸ்டாரண்ட் திறப்பது வரை இந்தியாவில் அதற்கு ரசிகர்கள் அதிகமாகி வருகின்றனர்.
நம் நாட்டில் உள்ள பலரை பொறுத்தவரை கொரியன் படங்களும் சரி, சீரிஸும் சரி வெறும் பொழுதுபோக்கல்ல. அதையும் தாண்டி அதில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஏனென்றால் அது அவர்களின் உணர்வுகளோடு கலந்துள்ளது. மற்ற திரைப்படங்களை போல அல்லாமல் கொரியன் சீரிஸ், கே-பாப் காண்போரின் மனநலனை மேம்படுத்தும் என தற்போது வல்லுநர்களும் கூறுகின்றனர்.
எதார்த்த உலகின் சிக்கல்களிலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும் தப்ப பலர் கொரியன் சீரிஸை பார்க்கின்றனர். இந்த சீரிஸ் மக்களின் மனதில் உள்ள ஆறாத காயங்களை தேற்றுகிறது. தன்னிலையை ஏற்றுக்கொள்தலை (self acceptance) கொரியன் சீரிஸ் ஊக்குவிக்கிறது. கொரியன் சீரிஸ், உலகம் முழுக்க பல ரசிகர்களை பெற பல காரணங்கள் உள்ளன. கொரியன் சீரிஸின் கதைக்களங்கள் அதன் மீது கவனம் ஈர்க்க முக்கிய காரணம் ஆகும்.
கொரியன் சீரிஸில் வரும் கதாப்பாத்திரங்கள் தனித்துவம் வாய்ந்தவையாக உள்ளன. மெய்மறக்க வைக்கும் வைக்கும் ஒளிப்பதிவு, நிஜ உலகை மறந்து ரசிக்க வைக்கும் நகைச்சுவை, கண்களுக்கு விருந்தாகும் அழகியல் என இந்த சீரிஸ் பலதரப்பட்ட விஷயங்களை கொண்டுள்ளது. தி டெய்லி கார்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனநலனை மேம்படுத்தும் காரணிகள் கொரியன் சீரிஸில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் கொரிய-அமெரிக்க சிகிச்சையாளரான ஜீனி சாங், கே-நாடகங்கள் (Korean drama) பார்வையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக கூறியுள்ளார். கவலை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றை இந்த நாடங்கள் சித்தரிக்கும் விதம் அதை பார்க்கும் நபர்களை அவர்களுடைய போராட்டங்களை எதிர்கொள்ளத் தூண்டுகிறதாவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Beauty Tips : கொரியன்ஸ் போல கிளாஸ் ஸ்கின் வேண்டுமா..? சியா விதையை இப்படி யூஸ் பண்ணுங்க!
தப்பிக்கும் மனப்பான்மை:
நிஜ உலகின் கசப்பான சம்பவங்களை மக்கள் விரும்புவதில்லை. கடினமான சூழல்கள், சவால்கள் எல்லாம் மறந்து கொஞ்சம் மனதை இலகுவாக்கவே பொதுவாக மக்கள் தொலைக்காட்சி, செல்போன் பயன்பாட்டை அதிகரிக்கிறார்கள். திரைப்படங்களும், சீரிஸும் காண்பதும் அதற்காக தான். நிஜ உலகத்திலிருந்து கொஞ்ச நேரம் தப்பிப்பது மக்களுக்கு ஆறுதலாக உள்ளது.
கொரியன் சீரிஸ் அந்த உணர்வையே மக்களுக்கு தருகிறது. கொரியன் நாடகத்தைக் காண்பதால் வெவ்வேறு கலாச்சாரங்கள் உங்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது. கொரியன் சீரிஸ் பார்க்கும்போது உங்களுடைய கவலைகளை மறந்துவிடுவீர்கள். கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கைக் காட்சிகள், புதிய பேஷன், இசை உங்களை மற்றொரு உலகத்திற்கு கூட்டி செல்லும்.
உணர்ச்சி தழும்பல்;
கொரியன் நாடகங்கள் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன. அதில் உள்ள உறவுகள் உங்கள் மனதை தொடுகின்றன. ஒரு காதல் கதையை நீங்கள் பார்த்தால் அதனோடு ஒன்றிவிடுவீர்கள். ஒரு எபிசோடில் பல உணர்ச்சிகளை உணரமுடியும். இந்த சீரிஸில் கிடைக்கும் மனநிறைவு மன ஆரோக்கியத்திற்கு உதவுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. மன அழுத்தத்தை குறைக்கும். புதிய முயற்சிகளை செய்யும் நம்பிக்கைய தருகிறது.
இதையும் படிங்க: கொரிய ஆண்கள் மேக்கப் போடுவதற்கு இதுதான் காரணம்.. தெரிஞ்சுக்கோங்க..!!
மீண்டு வர பாடங்கள்!
உங்கள் மனநிலையை மீட்டுத் தரவும் கொரியன் சீரிஸ் உதவுகிறது. அவை வெறும் காதல், நகைச்சுவைகளை கொண்டவை அல்ல. அதில் உங்களுக்கு மற்ற காரணிகளும் உள்ளன. தோல்வி, துயரம், நட்பு, கஷ்டத்தை சமாளிப்பது, அதிர்ச்சி, சவால்களை சமாளிப்பது ஆகியவும் உள்ளன. கொரியன் தொடர்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்களும் உள்ளன. அதன் மூலம் உங்களுடைய கஷ்டங்களை கடக்கும் வழிகளைக் கண்டறியலாம். கடினமான சூழலை கண்டு அஞ்சாமல் அதனை எதிர்கொள்ளும் திறனை பெற பார்வையாளரை கொரியன் சீரிஸ் ஊக்கமளிக்கிறது.
சமூகத்தில் ஒருவர்!
கொரியன் சீரிஸ் ரசிகராக உள்ளவர்கள் சமூகத்திலும் ஒரு அங்கமாக இருந்தால் அவருடைய மனநலனுக்கு நல்லது. உங்களுக்கு பிடித்த நாடகங்களைக் குறித்து பேசுவதன் மூலம் பிறருடன் தொடர்பு ஏற்படுகிறது. இதனால் தனிமை விலகி உங்களுடைய மனநிலை மேம்படும். பிறருடனான உரையாடல்கள் உங்களுடைய மனதை இலகுவாக்கும்.