அப்படி பபூக்களை ஒரு வாரம் ஆனாலும், உதிராமல் ஃபிரஷாக செடியில் பறித்த மல்லிகை போன்று வைத்திருக்க தேவையான உதவி குறிப்புகள் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்
அதற்கு நீங்கள் கடைக்கு சென்று, நல்ல மொட்டாக இருக்கும் பூவை வாங்கி வைத்து கொள்ளுங்கள். பிறகு, பூக்களை வாங்கி வந்த பிறகு பூவை கொடுத்திருக்கும் கவரில் இருந்து எடுத்து, ஒரு பேப்பரில் கொட்டி பத்து நிமிடம் ஆறவிடுங்கள்.
பிறகு பூக்கள் மொட்டாக இருக்கும் போதே கட்டி விடுங்கள், அழகாக பூக்களை, பூ போல் எடுத்து கட்ட வேண்டும். ஆம், பூக்களை கட்டும் போதும் பூக்களை கசக்கி, காம்புகளை உடைத்து விடாமல், கவனமாக கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பிறகு, ஒரு பெரிய சில்வர் டப்பா எடுத்துக் கொள்ளுங்கள். அதின் அடியில் ஒரு பேப்பரை போட்டு, கட்டிய பூக்களை அதில் வையுங்கள், பூக்களுக்கு இடையிடையில் சிறு, சிறு துண்டு பேப்பர் களை வைத்து விடுங்கள். அதாவது பூக்களை சுற்றும் போது, ஓவ்வொரு அடுக்கிற்கும் இடையில் பேப்பர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.