எச்சரிக்கை..! ஏசியில் நீண்ட நேரம் இருக்கும் நபரா? மோசமான பின் விளைவுகள் வரும்.. அறிகுறிகள் இதோ..

Published : Dec 01, 2023, 02:04 PM ISTUpdated : Dec 01, 2023, 02:11 PM IST

நாம் நீண்ட நேரம் ஏசியில் இருக்கும் போது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்..

PREV
17
எச்சரிக்கை..! ஏசியில் நீண்ட நேரம் இருக்கும் நபரா? மோசமான பின் விளைவுகள் வரும்.. அறிகுறிகள் இதோ..

இப்போது ஏசியும் வீட்டில் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. மேலும் அலுவலகங்கள், கார்கள், வீடுகள், உணவகங்கள், ஓட்டல்கள் என பல இடங்களில் ஏசி இல்லாமல் இருப்பதில்லை. அந்த அளவிற்கு அவற்றின் தேவையானது மக்கள் மத்தியில் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

27

அதுமட்டுமின்றி இன்னும் வரும் காலத்தில் ஏசி இல்லாமல் மக்களால் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படலாம். ஆனால் ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஏசி, உடலுக்கு குளிர்ச்சியான காற்றை வழங்குகிறது ஆனால்.. ஏசி காற்றை அதிகமாக சுவாசிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பல.

37

குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு சுவாசம் மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, பெரியவர்களுக்கும் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்..

 

47

நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் ஏற்படும் விளைவுகள்: உடல் வலிகள்: நீண்ட நேரம் ஏசியில் தங்கி அந்த காற்றை சுவாசிப்பதால் உடல் வலி வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி உடலும் மரத்துப் போகும். ஏசியில் இருக்கும்போது மூட்டு வலி வந்தால்.. அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, கீழ் முதுகுவலியும் அதிகமாக வரும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

இதையும் படிங்க:  EB Bill Hacks!! AC பில் எகிறுதா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க.. ஏசி பில் பாதியாக குறையும்!

57

நீரிழப்பு ஏற்படலாம்: நீண்ட நேரம் ஏசியில் இருப்பது குளிர்ச்சியாக இருக்கும். இதனால் அதிக வியர்வை ஏற்படாது. இதன் காரணமாக அதிக தாகம் எடுக்காததால், குறைவாகவே  தண்ணீர் குடிக்கிறோம். இப்படி தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் உடலில் நீர் சத்து குறைய வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க:   ஏசி தண்ணீரை வீணாக்காதீங்க..!! இப்படி யூஸ் பண்ணுங்க..!!

67

குமட்டல் - தலைவலி: ஏசி ஆன் செய்யும்போது, வெளிக்காற்று உள்ளே வர வாய்ப்பு குறைவு. இதனால் அங்குள்ள காற்றை சுவாசிப்பதால் குமட்டல் ஏற்படுகிறது. இதுவும் வாந்தியை உண்டாக்கும். அதுமட்டுமின்றி தலைவலி வரவும் வாய்ப்புகள் உள்ளன. தலைவலியால் அவதிப்படுபவர்கள் ஏசியில் இருந்து விலகி இருப்பது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77

உலர் அரிப்பு தோல்: ஏசியில் இருப்பதால் குளிர் அதிகமாக இருக்கும். இந்த குளிர்ச்சியின் காரணமாக தோல் விரைவில் வறண்டுவிடும். இதனால் அவர்கள் மந்தமாக காட்சியளிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, குறைந்த அளவு தண்ணீர் எடுப்பதால், ரத்த ஓட்டம் நடக்காது. இதனால் உடலில் ஈரப்பதம் குறையும்.

Read more Photos on
click me!

Recommended Stories