
குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க அவர்களுக்கு அதிகமாக தண்டனை கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. ஒழுக்கம் தண்டனையில் இருந்து வருவது அல்ல. குழந்தைகளுக்கு விஷயங்களை எப்படி சொல்லிக் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். அடிப்பதாலும், கத்துவதாலும் மட்டுமே குழந்தைகள் பெற்றோர் பேச்சை கேட்டு விடமாட்டார்கள். அடித்தால் அவர்கள் சொன்ன பேச்சை கேட்பார்கள் என்று பல வீடுகளில் இன்றும் பெற்றோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு. அடிப்பதும், கத்துவதும் குழந்தைகளிடத்தில் ஆளுமை குறைபாட்டையும் பயத்தையுமே ஏற்படுத்தும்.
அடிப்பதும், கத்துவதும் குழந்தைகளின் மீது கொண்ட பாசம் என்றும் பலர் நினைக்கின்றனர். பல தலைமுறைகளாக இது பின்பற்றப்பட்டும் வருகிறது. ஆனால் பயத்தினால் ஒரு குழந்தை ஒழுக்கமாக வளர்கிறது என்றால் ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த வழியில் இருந்து குழந்தை மாறக்கூடும். கத்தாமல், அடிக்காமல், குழந்தைகள் மீது அதிகாரத்தை பயன்படுத்தாமல் அவர்களை எவ்வாறு நல்வழி படுத்த வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.
பெரிய பெரிய வார்த்தைகளை விட சிறிய மௌனம் குழந்தைகளை அசைத்து பார்க்கும். கத்தாமல், அடிக்காமல் குழந்தைகளை நல்வழிப்படுத்த உங்களுடைய கோபத்தின்போது சற்று மௌனமாக இருங்கள். பொறுமையாக சூழ்நிலையை கையாள பழகிக் கொள்ளுங்கள். அதிகமான கோபத்தில் அவர்களிடம் கண்டபடி கத்தாமல் மௌனம் காப்பது குழந்தைகளுக்கு தங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் கற்றுக்கொடுக்கும்.
குழந்தையை முழங்கால் இடச் சொல்லி தண்டனை கொடுப்பதை காட்டிலும், பெற்றோர் குழந்தைகளின் கண்களைப் பார்த்து பேசும் வகையில் சற்று தாழ்ந்து மண்டியிட்டு அவர்களிடம் உரையாடும் போது விஷயங்கள் மாறுகின்றன. நீங்கள் நிமிர்ந்து நின்று பேசும்போது குழந்தைகளுக்கு அது அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். கோபமாக உயர்ந்த மனிதர் ஒருவர் தங்கள் முன் பேசும்போது குழந்தைகள் பயப்படக் கூடும். அதற்கு பதிலாக நீங்கள் அருகில் அமர்ந்தோ அல்லது அவர்கள் முன்பு மண்டியிட்டு பேசும்போது உங்களிடம் வசதியாக உணர்வார்கள். மனம் திறந்து பேசுவார்கள்.
நீங்கள் சொல்லும் பெரும்பாலான விஷயங்களை குழந்தைகள் கேட்காமல் எதிர்த்து பேசுவது அவர்களுடைய குறும்புத்தனத்தால் தான். அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என்றோ அல்லது அவர்கள் பாதுகாப்பாக உணராத தருணத்திலோ உங்களை எதிர்க்கிறார்கள். நீங்கள் குழந்தைகளிடம் கத்தும்போது அவர்களுடைய மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே அவர்களிடம் பேசுங்கள். கத்தாதீர்கள். பதட்டமான சூழ்நிலைகளில் கிசுகிசுப்பது, நீங்கள் கத்துவதை விட அதிக கவனம் பெறுகிறது. இது குழந்தைகளிடம் ஆர்வத்தை தூண்டும். மென்மையான தொனி அவர்களின் மனதை தொடுகிறது.
நீ ஏன் அதை செய்தாய் நீ என்ன செய்திருக்கிறாய் பார் போன்ற துணியில் குழந்தைகளிடம் பேசாதீர்கள் அவர்கள் மீது பழி போடுவது பெற்றோரின் நோக்கமாக இருக்கக் கூடாது குழந்தைகளை பிரச்சனையை உணர செய்வதை பெற்றோரின் கடமையாகும் தொடர்ந்து குழந்தைகளை நீதி செய்துவிட்டாய் நீ இப்படி இருக்கிறாய் என பழி போடும்போது அவர்கள் நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வையும் இழக்கின்றன அவர்கள் தனிப்பட்ட விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள தயங்குவார்கள் இதற்கு பதிலாக அவருடைய தவறை தன்மையாக எடுத்துரைக்கலாம். உதாரணமாக, குழந்தைகள் பொம்மைகளை வீசி எறியும் போது, "பொம்மைகள் வீசப்படும்போது நீங்கள் கவலைப்படுவதாகவும், அது பிறரை காயப்படுத்தலாம்" என்று நீங்கள் அச்சப்படுவதாக குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளலாம்.